“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

233 0

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தன் பக்கம் இருப்பதால் சிலருக்கு வயிறு எரிவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்பாடு இன்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிப்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் நம் பக்கம், மாற்று முகாம் கலக்கம் என்ற தலைப்பில், கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்ற அக்கறை அதிகாரிகள் வரை இருப்பதால், மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகத்தை முன்பை விடச் சிறப்பாகத் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பண்பாடு இன்றி, அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப்பயணத்திலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதைப் பார்த்து சிலர் வயிறு எரிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Post

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - July 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Posted by - October 9, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில்…

சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி இர்பான்.. நடவடிக்கைக்கு பயந்து எடுத்த முடிவு

Posted by - May 22, 2024 0
ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என ரிவியூ சொல்லி யூட்டியூபில் பாப்புலர் ஆனவர் இர்பான். அவர் சமீபத்தில் தொடங்கிய குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராகவும் வந்திருக்கிறார்.…

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

Posted by - May 15, 2024 0
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி,…

உருவாகிறது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Posted by - November 27, 2023 0
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *