Generated Image November 06 2025 11 01AM

ஏறிய வேகத்துல பாதாளத்துக்கு போயாச்சு.. ZOHO Arattai

185 0

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய வேகத்தில் ஜோஹோ அரட்டை ஆப் (ZOHO Arattai App) ஆனது பர்சனல் சாட் மற்றும் குரூப் சாட் ஆகியவற்றுக்கு இ2இஇ (e2ee) என்னும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் (end to end encrypted) பாதுகாப்பை கொடுத்துள்ளது.

ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் ஆனது வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக களமிறங்கியது. உள்நாட்டின் தயாரிப்பாக இருந்ததால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரையில் அதை டவுன்லோட் செய்தது மட்டுமல்லாமல், அரட்டை ஆப் மீதான ஆதரவை தெரியப்படுத்தினர்.இந்த ஆதரவால் கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் 3,000 ஆக இருந்த புதிய சைன்-அப்கள் (Sign-Ups) அக்டோபர் தொடக்கத்தில் 1.5 லட்சமாக மாறியது. கிட்டத்தட்ட 100 மடங்கு வளர்ச்சியை கொடுத்தது. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டது. அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்கிற தனியுரிமை அம்சத்தை கொண்டிருக்கவில்லை. இதனாலேயே இந்த வீழ்ச்சியை பார்த்துள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், அப்படி ஏதும் கிடையாது என்பதை ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) நேரடியாக எக்ஸ் தளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். அனைத்து பர்சனல் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் இருக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான குரூப் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஆகவே, அரட்டை ஆப் ஆனது தனியுரிமை பாதுகாப்பை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த இ2இஇ பாதுகாப்பில் இரண்டு ஆப்ஷன்களை அரட்டை ஆப் ஆனது கொண்டிருக்கிறது.

Related Post

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயம்..

Posted by - March 15, 2024 0
மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் அவர்…

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

“என்னால புரிஞ்சுக்க முடியல” கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி

Posted by - June 12, 2025 0
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே…

ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசினார்: மனைவி பிரிந்து சென்றதால் குழந்தைகளை விற்க முயன்ற வாலிபர்

Posted by - July 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *