ஆந்திராவில் ரூ.30 லட்சத்துக்கு தக்காளி விற்ற வியாபாரி கொலை

304 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தார்.Andhra Pradesh Shocker: Alas, Farmer Earns 30 Lakhs In 20 Days As Tomato  Rates Rise, Thugs Kill Farmer For Money

இந்நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடந்த 20 நாட்களில் ராஜசேகர் ரெட்டிக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. இதனால் ராஜசேகர் ரெட்டி திடீரென லட்சாதிபதியானார். நேற்று ராஜசேகர் ரெட்டி தக்காளி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வசூலான பணத்துடன் தனது பைக்கில் வந்தார். அவரை மர்மநபர்கள் வழி மறித்தனர்.

அவரை கை, கால்களை கட்டி மறைவான இடத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு ராஜசேகர ரெட்டியிடம் பணத்தைக் கேட்டு அடித்து துன்புறுத்தினர். அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை அடித்து கொலை செய்தனர். பின்னர் பிணத்தை வீசிவிட்டு சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜசேகர ரெட்டியிடம் உள்ள ரூ.30 லட்சத்தை பறிக்க அவரை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும் பணம் தர மறுத்ததால் அவரை கொலை செய்து வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - August 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

டிசம்பர் 2024 முடிவதற்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான 2 வேலைகள்: இதுதான் கடைசி வாய்ப்பு..

Posted by - December 10, 2024 0
இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் (aadhaar) மற்றும் பான் (pan) கார்டு சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். குறிப்பாக இலவச…

கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை…

Posted by - June 9, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள்…
Generated Image November 06 2025 11 11AM

இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

Posted by - November 6, 2025 0
ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலான ஐடெல் ரிதம் எக்கோ (itel Rhythm Echo) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ்…

2018-ல் இருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்: மத்திய அரசு தகவல்

Posted by - December 8, 2023 0
இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் படித்து வருகிறார்களா? என்பது தெரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *