இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்

255 0

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட அதிக சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை மாணவர்கள் முந்தினார்களா இல்லையா  என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

12 ஆம் வகுப்பு தேர்வு: 8.21லட்சம் மாணவர்கள்

2024-2025 நிதியாண்டுக்கான  12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்டல் .4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது.

வெளியான முடிவுகள்:

இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மொத்தம் இந்த ஆண்டு   8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில்  தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494 இதில் மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316, மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178

தேர்ச்சி விவரங்கள்

  • தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)
  • தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049
  • கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.47% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

இந்த ஆண்டும் மிஸ் செய்த மாணவர்கள்:

வழக்கமாக இந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளை அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் தேர்வெழுதிய  மாணவியர்களின் எண்ணிக்கை 4,19,316 ஆகும். அதே போல மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178. இதில் 4,05,472 (96.70 %) தேர்ச்சி மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவரகளை விட மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்ற ஆண்டு எவ்வளவு:

கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7,60,606 பேர் எழுதிய நிலையில் மொத்தம் 7,19,196 மாணவ தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீகிதம் 94.56 சதவீகிதம் ஆகும்.

100% தேர்ச்சி:

மொத்தம் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 7,513 இதில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -2,638. அதே போல 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 436.

அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் டாப் 5

முதல் மாவட்டம் – அரியலூர் 98.82%

இரண்டாவது மாவட்டம் – ஈரோடு 97.98%

மூன்றாவது மாவட்டம் திருப்பூர் 97.53%

நான்காவது மாவட்டம் கோவை-  97.48%

ஐந்தாவது மாவட்டம் கன்னியாகுமரி-97.01%

Related Post

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்

Posted by - மார்ச் 26, 2026 0
தமிழகத்தில் வருகிற மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - டிசம்பர் 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - நவம்பர் 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - ஏப்ரல் 14, 2024 0
சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம்…

ரம்ஜான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Posted by - ஏப்ரல் 10, 2024 0
ரம்ஜான் பண்டிகை தேதி குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளதார். ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன