TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

237 0

அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம் பிரசாந்த் பீல்ட் அவுட் ஆக, அஜித் – விஜய்க்குத்தான் போட்டி.

இவுங்க ரெண்டு பேரும் ராஜபார்வை படத்துல சேர்ந்து நடிச்சிருந்தாலும், அதுக்கு பிறகு ரெண்டு பேரும் இதுவரை ஒன்னா நடிக்கவே இல்லை. அந்தளவுக்கு அஜித், விஜய் ரெண்டு பேருக்கும் பெரிய மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்க.

இதுல அஜித் ஒரு படி மேல போய் நீங்க உங்க குடும்பத்த, அப்பா, அம்மாவ பாருங்கன்னு தன் ரசிகர் மன்றத்தை கலைச்சிவிட்டுட்டாரு. தன்னை தலன்னு யாரு கூப்பிட வேண்டாமுன்னு சொல்லி, அரசியல் சம்பந்தமா என்னை இழுக்க வேண்டா, என் பெயரை பயன்படுத்த வேண்டான்னு சொல்லிட்டாரு.

இது ரசிகர்களுக்கு கடுப்பா இருந்தாலும், யோசிச்சு பார்த்தா அதுதான் கரெக்ட்ருன்னு தோணும், அதுக்கு அப்புறம் அவர் மேல எல்லாருக்குமே மரியாதை கூடிடுச்சு. அஜித்தும் சினிமாவுல நடிச்சிட்டே, கார் ரேஸிங், பைக் டூரின்னு தான் நினைச்சத பண்ணிட்டு சந்தோசமா இருக்காரு.

விஜய்யின் தவெகவுக்கு அஜித் ஆதரவா? இல்லையா?

ஆனால், விஜய் மக்கள் இயக்கம்னு நடத்தி, படத்திலையும் அரசியல் டயலாக்கலாம் வைச்சிட்டு இருந்தவரு, பிப்ரவரியில சொந்தமா தமிழக வெற்றிக் கழகம்-னு புது அரசியல் கட்சி தொடங்கி, சிவப்பு, மஞ்சல் வண்ணத்துல ஒரு கொடியை அறிமுகம் செஞ்சாரு. அக்டோபர் 27 லில் பிரமாண்டமாக மாநாடு நடத்துனாரு.

இப்ப என்னான்னா, அஜித், விஜய் ரெண்டு பேருக்கும் சினிமாவுலதான் போட்டி, ஆனால் நெசத்துல ரெண்டு பேரு பிரண்ட்ஸ்ன்னு பலர் பேரு சொல்லியிருக்காங்க. ஏன் விஜய்யே மேடையில நண்பர் அஜித்துன்னு தான் சொல்வாரு.

அப்படியிருக்க, அஜித் அடுத்த வருசம் அஜித் கார் ரேஸிங் அப்டீங்கற தன் சொந்த நிறுவனத்த ஐரோப்பியா கார் ரேஸில கலந்துக்க போறாரு. அதுக்காக தன் கார் ரேஸ் டீமையும், தன்போர்ஷே ஜிடி 2 கப் 24 ஹெச் செயல்திறனுள்ள ஸ்போர்ட்ஸ் காரையும் இன்னிக்கு அஜித் அறிமுகம் செஞ்சிருக்காரு. அதை சுரேஷ் சந்திராதான் வெளியிட்டிருக்காரு.

அதுல. தளபதியோட தவெக கொடியின் நிறமும், அஜித்தோட ரேஸிங் காரோட நிறமும் ஒரே மாதிரி இருக்குதுன்னு குழப்பத்தில் நெட்டிசன்ஸ் பேசிக்கிறாங்க. ஆனால், அஜித்துக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். அதேபோல விஜய்யோட ரூட்டும் வேற, அஜித்தோட ரூட்டும் வேற. இருவருடைய சிந்தனையும் வேற வேறன்ன சினிமா விமர்சகர்கள் சொல்றாங்க.

அதிலையும் அஜித்தோட ரேஸிங் காரிலயும், அவரோட ஜாக்கெட்லையும் தமிழ் நாடு அரசு சிம்பல் இருக்கிறப்பா, நிச்சயமா விஜய் கட்சிக் கொடியை புரமோட் செய்ய வேண்டிய அவசியம் அஜித்துக்கு இல்லவே இல்லைன்னும், அஜித் தனக்கு விரும்பமான நிறத்தை காருக்கு தேர்வு செஞ்சிருக்காருன்னும் பேசிட்டு இருக்காங்க.

ajith, vijay
ajith, vijay

Related Post

எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Posted by - April 1, 2025 0
சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால்…

பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

Posted by - November 21, 2024 0
அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால்…

நைட் தூங்குறதுக்கு முன்னாடி ‘இந்த’ பழத்தை சாப்பிட்டா போதுமாம்… நிம்மதியான தூக்கம் வருமாம்..!

Posted by - December 20, 2023 0
உங்களின் உறக்கத்தின் தரம் நீங்கள் உறங்குவதற்கு முன் உண்ணும் உணவைப் பொறுத்தது. படுக்கைக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள…

தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

Posted by - October 27, 2024 0
தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக்…

ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Posted by - September 12, 2025 0
TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். TET…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *