3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

271 0

சென்னை:

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழை) மதியம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.For the next 3 hours..." - Rain warning for 22 districts of Tamil Nadu |  "அடுத்த 3 மணி நேரத்திற்கு.." - தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசான மழை பெய்யும். நாளை (30-ந் தேதி) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலை தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் நிலவுகிறது. ஆனால் அத்தகைய நிலை ஏற்படுமானால் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Post

aqwertyujkl

TVK VCK Alliance: சல்லிசல்லியாகும் திமுக கூட்டணி.! விசிக-வை கூட்டணிக்கு அழைத்த விஜய்.? வருவாரா திருமா.?

Posted by - May 6, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில்…

“மியூட் மோடில் திமுக அரசு” தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

Posted by - June 5, 2025 0
“80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

சிறுத்தை நடமாட்டம்… மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted by - April 5, 2024 0
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க…

ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?: அதிகாரி விளக்கம்

Posted by - September 21, 2023 0
கோவை: நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை…

மார்கழி மாதம் கோயில்களில் தினம் தினம் பாடல்கள்: ஏன் இது முக்கியம்?

Posted by - December 20, 2025 0
மார்கழி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புனிதமான காலம். இந்த மாதத்தில் கோயில்களில் தினமும் பக்தி பாடல்கள் ஒலிக்கின்றன. இதன் பின்னணி, நோக்கம் மற்றும் மக்களுக்கு ஏற்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *