ஆட்சி, அதிகாரத்தில் பங்கு – தவெக மாநாட்டில் விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு

188 0

தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்கள் கொள்கை, கோட்பாடுகளையும், செயல்திட்டங்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தங்கள் கட்சியின் செயல்திட்டங்களை விளக்கும்போது பேசிய விஜய், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கான பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதை உறுதி செய்ய அதற்காக தனித்துறை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ஏற்றத்தாழ்வில்லாத கல்வி, மருத்துவம், இடஒதுக்கீடு என எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதை அடிப்படை உரிமையாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுதான் சமூகநீதிக்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி வரும் 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சியை அமைக்கும். இருந்தாலும் நம்மை தேடி வரக்கூடியவர்களை நம்முடன் அரவணைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தரப்படும்” என்றார்.தமிழ்நாட்டில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.இந்த நிலையில் விஜய்யின் அறிவிப்புக்கு பிறகு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்கள் தமிழ்நாட்டில் எழத்தொடங்கியுள்ளது எனவும் இனி தமிழ்நாட்டின் அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Post

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்

Posted by - September 25, 2023 0
ஈரோடு: தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை…
Generated Image February 04 2026 5 24PM

நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே – அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை

Posted by - February 4, 2026 0
அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில்…

சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

Posted by - May 2, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்

Posted by - April 18, 2025 0
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *