election e1773643444860

இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் – டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

171 0

TVK Vijay: டெல்லியில் சிபிஐ விசாரணையின் மூன்றாவது கட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பியுள்ளார்.

TVK Vijay: கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற விஜயிடம், பாஜக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை திரும்பிய விஜய்:

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, தவெக தலைவர் விஜய்க்கு மூன்றாவது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையேற்று, டெல்லி சென்ற அவர் நேற்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவகலத்தில் ஆஜரானார். காலை 10.30 மணிக்கு அவரிடம் தொடங்கிய விசாரணை, மாலை சுமார் 5 மணி வரையில் நீடித்தது. அதன் பிறகு வெளியே வந்த விஜய் அங்கு கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார். கடந்த முறையை போல தொடர்ந்து இரண்டாவது நாளும் அவரிடம் விசாரணை நடத்தப்படுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவோடு இரவாக தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இதனால், நேற்றுடன் இரண்டாவது கட்ட சிபிஐ விசாரணை விஜயிடம் முடிவடைந்தது என்பது உறுதியாகியுள்ளது.

 

கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

தவெக உடன் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என அதிமுக மற்றும் தமிழக பாஜக தரப்பில் திட்டவட்டமாக கூறப்படுகிறது. ஆனால் அவரை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என, டெல்லி பாஜக தரப்பு தீவிரம் காட்டுகிறதாம். இதுதொடர்பாக பல வடநாட்டு ஊடகங்களும் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தவெக நிர்வாகிகள் பலரும் வெற்றி பெற வேண்டுமானால், கூட்டணி வைப்பதே சரியான முடிவு என வலியுறுத்தியுள்ளனராம். ஆனால், பாஜக உடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கான எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாகிவிடும் என்பதே விஜயின் எண்ணமாக உள்ளதாம்.

விஜய் கேட்டதும்.. எடப்பாடி மறுத்ததும்..

டெல்லியின் அழுத்தத்தை சமாளிக்கும் விதமாகவும், கூட்டணிக்கும் செல்வதை தடுக்கவும் விஜய் தனது காயை நகர்த்தியுள்ளார். அதன்படி, 80 தொகுதிகளும், துணை முதலமைச்சர் பதவியும் தங்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். தனது கோரிக்கையை எடப்பாடி தரப்பு நிச்சயமாக ஏற்காது, அதனையே காரணம் காட்டி தான் கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும், உங்களால் தான் எனது கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என கூறி கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு விஜய் தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாம்.

 

அதிமுக சொல்வது என்ன?

விஜயின் கோரிக்கைக்கு பாஜக தரப்பு சரி என சொன்னாலும், அதிமுக தரப்பு முடியவே முடியாது என பதிலளித்துவிட்டதாக கூறப்படுகிறது. காரணம், விஜய்க்கு 80, பாஜகவிற்கு சுமார் 30 என கூட்டணி கட்சிகளுக்கே பெரும்பாலான தொகுதிகளை விட்டுக்கொடுத்தால், களமிறங்கும்போதே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் குறைவான தொகுதிகளிலேயே அதிமுக போட்டியிட வேண்டி இருக்கும் என எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படி நடந்து ஒரு வேளை ஆட்சி அமைத்தாலும், பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படாதா? என்றேல்லாம் யோசித்து வாய்ப்பே இல்லை என கூறியுள்ளாராம். விஜயின் புதிய கட்சிக்கு 25 தொகுதிகள் வேண்டுமானால் ஒதுக்கலாம் என கூறியுள்ளாராம். அதேநேரம், ஒருவேளை பாஜக இல்லாமல் விஜய் மட்டுமே நேரடியாக கூட்டணிக்குள் வந்து இருந்தால், நிச்சயமாக அவரது கோரிக்கைகளை ஏற்று, எடப்பாடி கூட்டணிக்குள் கொண்டு வந்து இருப்பார் என்றே ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற தேர்தல்:

இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கம் மார்ச் 30ம் தேதி தொடங்க உள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Post

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

Posted by - March 23, 2023 0
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர்  பரபரப்பான வாதங்களை முன்வைத்த நிலையில், இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள்…
fb

மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - April 27, 2026 0
Tamil Nadu Assembly election vote counting : காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், 30…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…
vvv

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

Posted by - March 16, 2026 0
கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத்…

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

Posted by - July 22, 2025 0
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *