உடல் சோர்வைப் போக்கும் மகராசனம்

225 0

தொடர் பணி, நீண்ட தூர பயணம், அலைச்சல் போன்ற காரணங்களால் உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறதா? மகராசனத்தில் கால் மணி நேரம் இருந்தால் போதும், அத்தனை களைப்பும் பறந்துபோய், உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடும்.உடல் சோர்வைப் போக்கும் மகராசனம் | Crocodile Pose Makarasana

‘மகர’ என்றால் முதலையை குறிக்கும் சொல். நம் உடல் இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், முதலையின் உருவம்போல இருப்பதால் இப்பெயர். உடல் சோர்வைப் போக்கும் மகராசனத்தை எப்படி செய்வது என தெரிந்துகொள்வோம்.

செய்முறை

விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளை ஒன்றன் மீது ஒன்றாக மடித்து வைத்துக் கொள்ளவும். கைகள் மீது தாடை பதிந்திருக்கட்டும். தாடைக்கு பதிலாக, கன்னத்தை கைகள் மீது பதிவதுபோல வைத்துக் கொண்டால், இன்னும் ரிலாக்ஸாக இருக்கும்.

கால்களை அகலமாக வைத்துக் கொள்ளுங்கள். குதிகால்கள் உள்பக்கமாகவும், கால் விரல்கள் வெளிப்பக்கம் நோக்கியும் இருக்கட்டும். முழு உடம்பும் நன்கு ரிலாக்ஸாக இருக்கட்டும். நன்கு நிதானமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியே விடுங்கள். 2-5 நிமிடங்கள் வரை இதே நிலையில் இருக்கவும்.

தேவைப்பட்டால், கூடுதல் நேரமும் இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். குப்புறப் படுக்க இயலாதவர்கள், நிமிர்ந்து படுத்து கால்களை சுமார் 90 degree அளவு உயர்த்தி சுவற்றின் மீது வைத்து, கைகளை வணக்கம் சொல்லும் முறையில் மார்பின் மீது வைத்துப் பழகவும்.

மகராசனத்தின்போது இடும்பு, முதுகு, தோள் பகுதிக்கு முழு ஓய்வு கிடைப்பதால், அப்பகுதிகள் ரிலாக்ஸ் ஆகின்றன. ஆஸ்துமா உட்பட நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்த ஆசனம் ஆகும். நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முதுகு வலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

Related Post

ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - April 15, 2023 0
டிக்டாக் பிரபலமான ஜிபிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜிபிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்டாக் மூலம்…

ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - October 23, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க அந்த வீட்டுப் பெண்களும் போராடி வருகிறார்கள். கொஞ்சம் எதிர்த்து அவர்கள் வெளியே வந்தாலும் முழுவதுமாக…

முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்… இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

Posted by - February 6, 2023 0
பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி…

விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா.. தளபதி 68ல் நடிக்க சம்மதம் சொல்லவரா டாப் நடிகை

Posted by - May 19, 2023 0
தளபதி 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக…

அடிக்கடி டென்டல் செக்கப் பண்ண வேண்டியது அவசியம்.. ஏன் தெரியுமா..?

Posted by - November 16, 2023 0
பல் வலி அல்லது பிற பல் சார்ந்த கோளாறுகள் மிகவும் பொதுவான அதே சமயம் வலி மிகுந்த மற்றும் பெரும்பாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிரச்சனை. எனவே உங்களது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *