இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகைகள்.!

313 0

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வருவதை அந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகள் இருவர் உறுதி செய்து இருக்கின்றனர். 2022 பிப்ரவரி மாதம் தொடங்கி 730 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். நடிகர் விஜயின் அம்மா சோபனா தொடங்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலரும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சில மாதங்களாகவே மக்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறது ‘எதிர்நீச்சல்’"ஆம் சீரியல் முடிய போகிறது" இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைகள்.! 1"ஆம் சீரியல் முடிய போகிறது" இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைகள்.! 3அதற்கு முக்கிய காரணம், ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனைகள் உருவாகி இடியாப்ப சிக்கல்கள் போல புதுப்புது பிரச்சினைகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் எதற்கும் தீர்வு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் ‘எதிர்நீச்சல்’ என பெயர் வைத்துக் கொண்டு பெண்கள் எதிர் நீச்சலே போடாமல் இருந்து வருவதாகவும் விமர்சிக்கப்பட்டது. மக்களின் மிகுந்த அதிர்ச்சியை பெற்ற இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யபிரியா இன்ஸ்டாகிராமில் இதை உறுதி செய்தார்."ஆம் சீரியல் முடிய போகிறது" இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைகள்.! 7ரசிகர் ஒருவர், சத்யா பிரியாவிடம் “அம்மா எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு ‘ஆம்’ என பதிலளித்து இருக்கிறார். மேலும் ஆதிரையாக நடித்து வரும் சத்யா தேவராஜனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில விஷயங்கள் முடிவுக்கு வரும்போது அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என பகிர்ந்திருக்கிறார். இவர்களின் இந்த பதிவுகளை பார்த்த பின்னர் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வருவதை தற்போது ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த சீரியல் முடிந்த பின்னர் கேப்ரியல்லா நடிக்கும் புது தொடரான ‘மருமகள்’ ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

குளிர்காலத்தில் ஹீட்டர இப்படி பயன்படுத்தி பாருங்க.. ஈபி பில் மிச்சமாகும்.!

Posted by - December 24, 2024 0
வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் டிவைஸ்களை வாங்கும் போது, ​​அவற்றின் நட்சத்திர மதிப்பீட்டில் நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு எலெக்ட்ரிக் டிவைஸ்-இன் நட்சத்திர மதிப்பீடு…

சிங்கப்பெண்ணில் செவரக்கோட்டை வந்த ஆனந்தி.. கோகிலா திருமணத்தில் அவிழ இருக்கும் மர்ம முடிச்சுகள்!

Posted by - June 27, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக நடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மர்மத்திற்கும் எப்போது விடை…

குடைமிளகாயை வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. குழந்தைங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க…

Posted by - August 25, 2023 0
உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்யுங்கள். குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இதைக் கொண்டு சட்னி செய்து…

2025-ல் Electric Bike வாங்கலாமா? Mileage, Battery Cost, Charging Time… Experts சொல்லும் உண்மையான தகவல்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025-ஐ enter பண்ணியதும் India முழுக்க electric bike (EV) market வேகமா வளர்ந்து கொண்டே இருக்கு. ஆனா இன்னும் பெரும்பாலோருக்கு ஒரே சந்தேகம் –…

IPL 2023: சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ..!

Posted by - April 3, 2023 0
சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல்-லில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. 16-வது ஐபிஎல் கிரிக்கெட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *