உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் – பயனர்கள் தவிப்பு.!

256 0

பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது.
அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று முடங்கியது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், கணக்குகள் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனாளர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

இது தொடர்பாக கூடுதல் விவரம் அறியவும், புலம்புவதற்கும், ஏராளமான பயனாளர்கள் எலான் மஸ்கின் எக்ஸ் பக்கத்தில் குவிந்தனர். அவர்களை வரவேற்ற எலான் மஸ்க், தற்போது அனைவரும் ஏன் இங்கே கூடியிருக்கிறீர்கள் என தெரியும் என்று பதிவிட்டார்.

மேலும் இப்பதிவை உங்களால் படிக்க முடிகிறது என்றால், தங்கள் செர்வர் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் என்றும் நக்கல் அடித்தார்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை கலாய்த்து பயனாளர்களும் ஏராளமான மீம்ஸ் மற்றும் வீடியோக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர். பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது.

பேஸ்புக், இன்ஸ்டா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலியும் சற்று தடுமாறியது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர் பெர்க், சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்.

தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து சற்று விலகி பெற்றோரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள் என்ற அட்வைஸையும் மார்க் வழங்கினார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா இயல்பு நிலைக்கு திரும்பியது.

சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய மெட்டோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்பட்டதாக கூறினார்.ரிலாக்ஸாக இருக்க பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சென்ற பயனாளர்கள், தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் மன அழுத்தத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Post

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

ட்ரம்புடன் கைகோர்ப்பு.. இந்தியாவிற்கு எதிராக பேசும் கனடா பிரதமர், ஊறுகாய் ஆகும் பாக்., பிரச்னை

Posted by - October 8, 2025 0
இந்தியா – பாகிஸ்தான் மோதலை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பை, கனடா பிரதமர் பாராட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை அமெரிக்க…

காதலிக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.900 கோடி சொத்தை உயில் எழுதி வைத்த முன்னாள் இத்தாலி பிரதமர்

Posted by - July 10, 2023 0
ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868…

எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

Posted by - December 27, 2022 0
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…

Posted by - July 8, 2023 0
அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *