குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

238 0

பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும். திறப்பதற்கு முன்னதாக பாதுகாவலர்கள் கோபுரத்தில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அப்போது, அமெரிக்கர்கள் இரண்டு பேர் கோபுரத்தின் உச்சியில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்க பயணிகள் இருவரும் அதிகளவில் மது அருந்தி இருந்ததால், கோபுரத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு இடையே பொதுவாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் இரவு முழுவதும் உறங்கியுள்ளனர். ஆனால், இருவரும் எந்தவொரு வெளிப்படையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணியளவில் நுழைவுச் சீட்டுக்கு பணம் செலுத்திய பிறகு, கோபுரத்தின் உச்சியில் இருந்து படிக்கட்டுகளில் ஏறும்போது இருவரும் பாதுகாப்பு தடைகளைத் தாண்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இருவரையும் மீட்பதற்காக சிறப்பு பிரிவு உள்பட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவத்தால், பொது மக்களின் பார்வைக்காக ஈபிள் கோபுரம் திறப்பதில் ஒரு மணி நேரம் தாமதமானது.

Related Post

ட்ரம்புடன் கைகோர்ப்பு.. இந்தியாவிற்கு எதிராக பேசும் கனடா பிரதமர், ஊறுகாய் ஆகும் பாக்., பிரச்னை

Posted by - October 8, 2025 0
இந்தியா – பாகிஸ்தான் மோதலை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பை, கனடா பிரதமர் பாராட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை அமெரிக்க…

வெளியானது ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Posted by - February 13, 2025 0
சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன. ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். 1995ஆம் ஆண்டு முதல்…

இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் – சிக்கித் திணறிய துருக்கி

Posted by - February 20, 2023 0
துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக…

ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.. ”கேன்சல் பண்ணிட்டா..” வார்னிங்

Posted by - August 30, 2025 0
அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் ரத்து செய்யப்பட்டால் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என,…
Generated Image November 17 2025 11 15AM

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

Posted by - November 17, 2025 0
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *