ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

322 0

புதுடெல்லி:

ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர். தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. பிரகதி மைதானத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

Posted by - January 16, 2025 0
இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற…

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Posted by - July 31, 2024 0
Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம்…

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

Posted by - May 30, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *