எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. “ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு”

165 0

ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் ஏழைகள் நலனுக்கான  திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“கருணையுள்ள அரசு”

அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு  சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

இவை வீட்டுவசதி, சுத்தமான சமையல் எரிவாயு, வங்கி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் பலன்களை வெளிப்படையாகவும் திறமையாகவும் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நேரடி பணப் பரிமாற்றம், மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி”

கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்தியஅரசு.

கடந்த பத்தாண்டுகளில், அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படுவதன் மூலம் வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி:

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைத்துள்ளன. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் வீட்டுவசதி, தூய்மையான சமையல் எரிவாயு, வங்கி சேவைகள், சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன.

நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில், டிஜிட்டல் பரிமாற்ற நடவடிக்கைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதையும் உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாகவே 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீண்டுள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Related Post

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம் கருத்துக் கணிப்பில் தகவல்..!

Posted by - May 28, 2023 0
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை…
Gemini Generated Image adeqyiadeqyiadeq

ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?

Posted by - March 20, 2026 0
ஈரான் போர் சூழலால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று முதல், BPCL ‘ஸ்பீட்’, HPCL ‘பவர்’ மற்றும் IOCL-ன் ‘XP95’ போன்ற ப்ரீமியம் பெட்ரோல்களின்…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - July 10, 2023 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *