‘ஏகே 62’ படப்பிடிப்பே தொடங்கவில்லை.. திடீரென டிரெண்ட் ஆகும் ‘ஏகே 63’

266 0

அஜித் நடித்த 61வது திரைப்படமான ‘துணிவு’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் ஐஸ்வர்யா ராய் உள்பட ஒரு சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் ’ஏகே 63’ படத்தின் ஹேஷ்டேக் திடீரென சமூக வலைதளங்களில் டிராகி வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிக்க இருக்கும் 63 வது படமான ’ஏகே 63’ படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அட்லி, சிறுத்தை சிவா, விஷ்ணுவர்தன், சுகுமார் ஆகிய நான்கு இயக்குனர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இதில் அட்லி இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகின்றன. இந்த படத்தின் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ajith270123 2.jpg?w=700&dpr=1

அஜித் ஏற்கனவே ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் செய்ய ஒப்புக் கொண்டால் தொடர்ந்து அதே நிறுவனத்திற்கு மூன்று படங்கள் நடித்து கொடுப்பார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் லைகா நிறுவனத்திற்கும் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

லண்டனில் நடைபெறும் பின்னணி இசை.. பொன்னியின் செல்வன்-2 படத்தில் தீவரம் காட்டும் படக்குழு

Posted by - March 21, 2023 0
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள்…

RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால்

Posted by - March 14, 2023 0
ஆஸ்கர் விருது வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல். ராஜமௌலி இயக்கிய இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு…

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Posted by - May 4, 2023 0
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக…
image

வேலை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்…

Posted by - February 16, 2026 0
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது அமரன் படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் இப்படத்தின்…

தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ரஜினியின் ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

Posted by - August 23, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப், ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *