ஓவியம் வரைய கற்றுத்தந்த போது 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி உதவியாளர்

341 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் உதவியாளராக இருப்பவர் சத்யா ராவ் (வயது 40). சிறுமி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் சத்யா ராவ் வசித்து வருகிறார்.பள்ளி வேனில் வைத்தே பலாத்காரம்.. 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை..  பெற்றோர்களே உஷார் | Madhya Pradesh: 3 year old girl raped in school van by  driver - Tamil Oneindia

இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருவதால் மாணவிக்கு பாடம் கற்றுக் கொடுக்கவும், ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கவும் சத்யா ரா வ் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை சத்யா ராவ் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார். வீட்டில் அவரது பெற்றோர் இருக்கும் நேரத்தில் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியின் நிர்வாண வீடியோவை தனது நண்பர்கள் 3 பேருக்கு அனுப்பி வைத்தார்.

அவர்களும் வீடியோவை காட்டி மாணவியை பணிய வைத்து கட்டாயமாக பலாத்காரம் செய்தனர். கடந்த மாதம் 3-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பலமுறை மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. கடந்த 6-ந் தேதி மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனை கண்ட அவரது தாய் மாணவியிடம் விசாரித்தார்.

அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தாயிடம் மாணவி தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாய் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாராவ் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு சத்யாராவை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

Posted by - February 23, 2023 0
ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு…

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி

Posted by - September 4, 2023 0
புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி…

வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

Posted by - July 13, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு…

நாளை சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்

Posted by - July 1, 2023 0
புதுடெல்லி: அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம… கம…, சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *