கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்… யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

197 0

தலித் மக்களின் குரலாக திகழ்ந்தவர், ஒட்டுமொத்த சென்னையே பேசும் அளவுக்கு வளர்ந்துள்ள ஆம்ஸ்ட்ராங் யார்?

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம் முதலே அரசியலில் ஆர்வமுடையவராக இருந்துள்ளார்.

விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். அதே ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99 ஆவது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வாகியிருந்தார்2007-ல் அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011 ஆம் ஆண்டில் அம்பத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக தொடர்ந்து 17ஆண்டுகள் இருந்த இவர், தூய்மை பணியாளர்களுக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு, தலித் மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் சென்னை பெரம்பூரில் தான் வசித்து வந்த வீட்டிற்கு அருகில் பௌத்த விகாரம் ஒன்றைக் கட்டியவர் ஆம்ஸ்ட்ராங். இவர் தற்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

MK Stalin

MK Stalin: “நீங்க சொல்றதை வச்சுதான் நான் முடிவு எடுக்கனும்..” மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

Posted by - May 28, 2026 0
திமுக-வில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் வரும் 31ம் தேதிக்குள் கருத்துக்களை பகிருமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க…

விவசாயம் குறித்து விவாதிக்கத் தயாரா..?

Posted by - April 4, 2024 0
கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

Posted by - October 29, 2025 0
தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020…

சட்டப்பேரவை சர்ச்சை : அடுக்கடுக்கான விமர்சனங்கள்… ஆளுநர் தரப்பு கொடுத்த விளக்கம்..!

Posted by - January 9, 2023 0
Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அரசாங்கத்தை…

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *