கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்… தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள்… நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

214 0

கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் – கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். தேர்தல் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், கட்சி தலைவராக தான் என்ன செய்ய வேண்டும், கட்சி தலைமை மேல் உள்ள குறைகள் என்ன என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதற்கிடையே, செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு செய்தயாளர்களை சந்தித்த அக்கட்சியின்  துணைத்தலைவர் மௌரியா, ”  கமல்ஹாசனின் சிந்தனையோடு ஒத்துப் போகக் கூடிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி  அமைக்கப்படும் என்றும் அவ்வாறு இல்லாத சூழலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Post

ASDFGH

செம அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! ஏன்?

Posted by - February 17, 2026 0
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு…

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

Posted by - February 7, 2024 0
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும்…
tvk vck

பனையூரை நோக்கி மக்கள் நலக் கூட்டணி? சிக்னல் கொடுத்த காங்., திருமா, கம்யூ.,? விஜயின் அமைச்சரவை ரெடி?

Posted by - May 5, 2026 0
TVK Vijay TN Election 2026: தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. TVK…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *