குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

323 0

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய குழந்தை கூறி இருந்தது.

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற குழந்தையின் வீடியோ வைரலான நிலையில், அந்தக் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நடிகர் விஜய் வீடியோ காலில் உரையாடியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமான ‘லியோ’வில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார்.

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய குழந்தை கூறி இருந்தது. அந்த வீடியோ நேற்று முழுவதும் வைரலாக பரவியது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த வீடியோவை விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.  இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இன்று அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார்.

Related Post

கொலை மிரட்டல் விடுக்கும் என்ஜினீயர்.. பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி

Posted by - September 28, 2023 0
கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற…

சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Posted by - August 8, 2023 0
சாதி தலைவரா? கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல…

2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

Posted by - October 8, 2024 0
2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும்…

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

Posted by - March 27, 2023 0
சிங்கம் 2 ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது. அதே கதையின் தொடர்ச்சியில் உருவான…
cinema news

முன்பதிவில் கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - May 12, 2026 0
கருப்பு சூர்யாவின் நடிப்பில் வருகிற 14ஆம் தேதி வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *