சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் அதிரடி

284 0

எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது – நீதிபதி.

சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் தெரிவித்தார்.மேலும், எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த நீதிபதி, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையின் தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது எனவும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என தெரிவித்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Post

ரூ.1.25 லட்சம் வரை அரசு கடன்… குறைந்த வட்டியில் – எப்படி வாங்குவது? யார் யாருக்கு கிடைக்கும்?

Posted by - January 30, 2025 0
ஆண், பெண் இருவருக்கும் ரூ.1.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதனை கடனை பெற விண்ணப்பிப்பது எப்படி, விதிமுறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக…

வானிலை அலெர்ட்…!

Posted by - May 10, 2023 0
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை 5.30 அளவில் காற்றழுத்த தாழ்வு…

இரணியல் அருகே 3 ஆண்டுகளாக 3 மகன்களை வீட்டில் அடைத்து வைத்த பெற்றோர்

Posted by - March 31, 2023 0
திங்கள்சந்தை : இரணியல் அருகே உள்ள ஆத்திவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர் பெல்சி நேற்று காலையில் ஊராட்சி அலுவலக ஊழியருடன் கானாங்குளத்தங்கரை பகுதியில் வரி வசூல் செய்ய…

‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - May 16, 2023 0
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர்…

பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகள், YouTuber-களின் அதிர்ச்சி வீடியோக்களை அடுத்தடுத்து லீக் செய்த மதன் ரவிச்சந்திரன்.. தமிழகமே பரபரப்பு..!

Posted by - March 16, 2023 0
பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.   எங்கும் அரசியல், எதிலும் அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *