தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு: தாம்பரம் 2-வது இடம் பிடித்தது

270 0

திருச்சி:

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.திருச்சி மாநகராட்சி தேர்தல்; திமுக கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள்  ஒதுக்கீடு: காங்கிரஸ், மதிமுக, முஸ்லிம் லீக் அதிருப்தி | trichy corporation  election ...

இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2-ம் இடத்தையும் பிடித்தது.

நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது. பேரூராட்சியை பொறுத்தமட்டில் விக்கிரவாண்டி முதலிடத்தையும், ஆலங்குடி 2-வது இடத்தையும், வீரக்கால்புதூர் 3-வது இடத்தையும் பெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் 9-வது மண்டலம் முதலிடத்தையும், 5-வது மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்தது. நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை மாநகராட்சிகளின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களிடம் வழங்க உள்ளார்.

Related Post

crime news

கோவை சிறுமி வழக்கில் ஷாக் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Posted by - May 23, 2026 0
சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கார்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் சடலமாக மீட்கபட்ட 10…

”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” – தவெக தலைவர் விஜய்

Posted by - January 6, 2025 0
இன்று நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பேசுபொருளான நிலையில், சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என தவெக…
Generated Image November 11 2025 11 22AM

“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படுவது மன்னிப்பே அல்ல” – கவுரி கிஷன்

Posted by - November 11, 2025 0
பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று…

நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *