கண்டுகொள்ளாத தமிழக அரசு:சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

246 0

920924

சென்னை: ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டுஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஊதிய முரண்பாட்டை களையக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

டிபிஐ வளாகத்தில் ஏராளமானோர் திரண்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கக் கோரி பார்வையற்ற பட்டதாரிகள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக வளாகத்தில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Post

பாத்ரூம்-ல் எட்டி பார்த்த அமுதவானன் !

Posted by - November 23, 2022 0
பிக்பாஸ்- 6 பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்-6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ்…
storm 1 1

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - December 4, 2023 0
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…

ஏசி வாங்க பட்ஜெட் இல்லையா? கோடையை சமாளிக்க குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஏசிக்களின் பட்டியல் இதோ.

Posted by - May 2, 2024 0
MarQ FKAC103SFAA  : இந்த ஏசியின் விலை வெறும் 18,888 மட்டுமே. இந்த 3 ஸ்டார் ரேட்டட் ஏசிக்கு 230 வி 50 ஹெர்ட்ஸ் மின்சாரம் தேவைப்படும். இந்த…

திருமண மண்டபங்களில் மதுபானம் பறிமாறலாம்.. தமிழ்நாடு அரசு அனுமதி..!

Posted by - April 24, 2023 0
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற…

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

Posted by - January 19, 2025 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *