கொரோனா அச்சம் – மீண்டும் வருகிறது வொர்க் ப்ரம் ஹோம்…!

253 0

கொரோனா பரவல் அச்சம் காரணமாக மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலை கொண்டு வர நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தற்போது புதியவகை கொரோனா பிஎஃப் 7 (Omicron BF.7) வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா 4ஆவது அலை ஏற்பட்டால் போக்குவரத்து, சுற்றுலா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளிலுள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வீட்டிலிருந்து பணி செய்யும் முறைக்கு (Work From Home) மாற்ற ஆலோசித்து வருகின்றன. அதுபோலவே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியும் மந்தமடைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பணிக்கு ஆட்கள் எடுக்கும் ஸ்டாலின் சாஸ் நிறுவனத்தின் பங்குதாரர் மாலா சவ்லா கூறுகையில், “கொரோனா குறித்த தகவல்கள் மீண்டும் அதிகரித்து வருவதால் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணிகளை நிறுவனங்கள் குறைத்துள்ளன. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். என்றாலும் உற்பத்தி மற்றும் நுகர்வோர் துறையினர் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியைத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர்” என்றார்.

என்றாலும் கூட இந்தியாவில் கொரோனா தடுப்பு செலுத்தியதால் மக்கள் அதிக நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் பெரிய அளவில் இருக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Related Post

இந்திய பார் கவுன்சில் (BCI) AIBE 20 தேர்வு தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Posted by - October 29, 2025 0
AIBE அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளமான allindiabarexamination.com இல் வெளியிடப்பட்டுள்ளது . இது AIBE 2025 தேர்வு தேதி, AIBE தேர்வு அட்டவணை, AIBE கட்-ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் போன்ற அனைத்து…

நித்தியானந்தவின் புதிய திட்டம்

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர்…

எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்

Posted by - June 30, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை…

UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவா?

Posted by - April 19, 2025 0
– மத்திய நிதியமைச்சகம் மறுப்பு! 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என…

வீட்டில் கஞ்சா வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம்.. வேறு வழக்கிற்காக வந்த போலீசிடம் வசமாக மாட்டினார்

Posted by - February 24, 2024 0
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் எந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *