“சாவுன்னு வந்தாலே என் பெயர எழுதிட்றாங்க” – கடுப்பான நடிகர் கலையரசன்

237 0

ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள்.

ஸ்கிரிப்ட் எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன்” என நடிகர் கலையரசன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஷேன் நிகாம், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் கலையரசன், “நான் இதன் பிறகு அதிக கதாபாத்திரங்களில் நடிக்க போவது கிடையாது. இங்கே நிலவும் சூழல் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்பதே அதற்கு காரணம்.

நான் பல கதாபாத்திரங்களில் நடிக்க ரெடி. ஆனால், மலையாளத்தில் நடிகர்கள் பல நடிகர்களுடன் இணைந்து ‘மல்டி ஸ்டாரர்’ ஆக நடிப்பார்கள். திடீரென ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பார்கள். ஆனால், அவர்களை வைத்து ஹீரோவாகவும் படம் இயக்குவார்கள்.

ஆனால் இங்கே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், உதாரணமாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன். பாராட்டினாலும், கிண்டல் செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஒரு நார்மலாக ஒரு படம் எடுத்தால் கூட அதிலும் என்னை இரண்டாவது ஹீரோவாக தான் எழுதுகிறார்கள். இதனால் இனிமேல் நான் மிகவும் தேர்ந்தெடுத்து, மிகவும் சிறப்பாக இருந்தால் தான் கதாபாத்திரங்களில் நடிப்பேன். இல்லாவிட்டால் ஹீரோவாக தான் நடிப்பேன்” என்றார்.

Related Post

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு ..

Posted by - September 4, 2024 0
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி…

STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 11, 2023 0
STR 48 தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.…

இதனால் தான் அஜித்தின் ஏகே 62 பட அப்டேட் தாமதமாகிறதா? வெளியான காரணம்

Posted by - April 17, 2023 0
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 62 பட அப்டேட் தாமதமாவதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் துணிவு கலவையான விமர்சனங்களை…

நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்

Posted by - July 5, 2023 0
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *