பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

207 0

தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..

 

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு ஏதுவாக ஒரு மாத காலம் நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து உயர்க்கல்வித்துறையை கூடுதலாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனிப்பார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சூமோட்டோ வழக்கில் 3 ஆண்டு சிறை என்பது அதிகபட்ச தண்டனை என பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளதுடன், உச்சநீதிமன்றம் ஜாமீனும் வழங்கி உள்ளது. மேலும் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை நிறுத்தி வைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதி ஜெயச்சந்திரன் சூமோட்டோவாக எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில், தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது.

Related Post

வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

Posted by - January 2, 2024 0
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? புரோட்டீன்,…

எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Posted by - April 1, 2025 0
சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால்…

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - December 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…
Rajinikanth

Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” – ரஜினி கோரிக்கை

Posted by - May 17, 2026 0
Rajinikanth On Vijay: முதலமைச்சர் விஜயை இரண்டு வருடங்களுக்கு தொந்தரவு செய்யாமல் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என, ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். Rajinikanth On Vijay: தவெக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *