தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

255 0

“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.”

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். வெளியாவது, முதலில் இரு நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவித்து பிறகு ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றது, சம்பவத்தின் போது ஞானசேகரன் செல்போனில் யாரிடமோ, ‘சார்’ என பேசியதாக முதலில் தகவல் வெளியானது, பிறகு அவர் போனை ஃப்ளைட் மோடில் வைத்துவிட்டு போலியாக பேசினார் என்று தகவல் வெளியானது என பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது.மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக நிர்வாகி என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததும், அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்திருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.இந்நிலையில், நேற்று கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் அவர், “எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். மீடியாவில் இதை விவாதிக்க வேண்டும். இதைப் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.இதற்கிடையே, சொன்னது போலவே, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். 6 முறை எனக் கூறிய நிலையில், மொத்தம் 8 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்து உடலை வருத்திக் கொண்டார்.9ம் முறை அடிக்க முயன்றபோது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரைத் தடுத்த நிறுத்தினர். முன்னதாக, வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்த ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

Related Post

வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு

Posted by - December 2, 2022 0
குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும். ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு…
Gemini Generated Image gb5pfsgb5pfsgb5p

“எத்தகைய வெட்கக்கேடு?” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

Posted by - March 20, 2026 0
தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பின்னணி தூத்துக்குடி மாவட்டம்…

EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்… மின்சார வாரியம் அறிவிப்பு..

Posted by - November 26, 2022 0
ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம்…

ரேஷன் அரிசி இல்லாதபோது ஃபேஷன் ஷோ எதுக்கு? செவ்வாய்க்கு செங்கல்வராயன் ஏன்? பார்த்திபன் ஆதங்கம்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் எக்ஸ் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது: நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப…

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *