தமிழ் புத்தாண்டு 2023… செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..!

228 0

அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது.

சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புது வருடம் வரவேற்கப்படுகிறது. இந்த புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நாம் அனைவரும்  புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாகும்.

வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம். அதனால் இந்த பதிவில் தமிழ் புத்தாண்டாகிய சித்திரை முதல் நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

செய்ய வேண்டியவைகள்

1. தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் கொண்ட  தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.

2. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

3. தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை படைப்பது முறையாகும். அன்றைய நாளில் இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்குமாறு உணவானது அமைவது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம் ஆகும்.

4.அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவு புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.

5. சித்திரை மாத பிறப்பு என்பதால் கோடை காலத்தின் துவக்கத்தில் இருக்கிறோம். கோடை காலத்திற்கு உகந்த தானங்களை எல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் செய்வது நல்லது.

6. தோஷங்கள் நீங்கி வாழ்வு மலர உங்களால் முடிந்த அளவிற்கு குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். மேலும் நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவை செய்வதால் உங்களுடைய கர்மாக்கள் அனைத்தும் தீரும். பறவைகளுக்கு, விலங்குகளுக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் வைப்பதும் சிறப்பு.

6. தமிழ் புத்தாண்டு அன்று இறை வழிபாடுகளில் ஈடுபடுவதும் உங்களை மென்மேலும் வளர செய்யும். இளநீர், நுங்கு, விளாம்பழம், தர்பூசணி போன்ற குளிர்ச்சி மிகுந்த பழங்களை வாங்கி தானம் செய்வதும், நீங்கள் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. தமிழ் புத்தாண்டு அன்று கடைக்கு சென்று நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது மென்மேலும் அவைகள் பெருக செய்யும்.

7.  அதுபோல கல் உப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவதும் குடும்பத்தில் மென்மேலும் லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்யும்.

கிச்சன் சிங்க் கறையை எளிமையாக போக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.
செய்யக்கூடாதவைகள்

1. அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது.

2. வீட்டில் இருக்கும் போது ஒட்டடைகளை அகற்றக் கூடாது. வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. புதிய பொருட்களை வாங்கலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை அன்றைய தினம் யாருக்கும் கொடுக்கக் கூடாது.

3. மேலும் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கடன் வாங்கவும் கூடாது. தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டியவைகளை செய்து, செய்ய தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து வளமாக வாழ தமிழ் அன்னையை வணங்குவது சிறப்பு…

Related Post

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி! அண்ணாமலை பதவி பறிக்கப்பட்ட உடனே அறிவிப்பு!

Posted by - April 11, 2025 0
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதை அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

Posted by - July 13, 2024 0
 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

சூடான, சுவையான ‘பாப்கார்ன்’ உடல் எடை அதிகரிக்குமா? popcorn

Posted by - December 2, 2022 0
பாப்கார்ன்’ (popcorn)சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *