திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

250 0

திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில்  தளபதி விஜயின் வருகை எல்லோராலும் கூர்ந்து பார்க்கப்படுகிறது. அவர் அரசியல் படங்களில் நடித்தபோது, அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள், வசனங்கள், படத்தின் தலைப்புக்கு என பல தடைகள் வந்தன. அதைத்தாண்டி இன்று அரசியல் கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடத்த ஏற்பாடு செய்தபோதும் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக அவரது கட்சித் தொண்டர்கள் கூறினர்.

அதையும் தாண்டி, தவெக முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இம்மாநாட்டிற்காக தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்து வருகிறார். இம்மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் விஜய் பல நிபந்தனைகள் வெளியிட்டு கட்டுக்கோப்பாக மாநாடு நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தவெகவின் மாநாடிற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதித்த அரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நிபந்தனை விதித்தார்களா? ஆளுங்கட்சியின் மாநாடுகளுக்கு நிபந்தனைகள் விதித்தார்களா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே விஜயின் அரசியல் வருகை, அவரது கட்சியின் முதல் மாநாடு இதைப்பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் விஜய்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்தாலும் சினிமாத்துறையினரும், அரசியல் விமர்சகர்களும் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவான கருத்துகளை கூறி வருவது தவெக தொண்டர்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இதை அவர்கள் தளபதி 2026 சட்டசபைத் தேர்தலில் வாகை சூடுவதற்காக ஆருடமாக எடுத்துக் கொண்டு களப்பணி ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கட்சிப் பெயரை அறிவித்ததுடன், அக்கட்சிக்கு என தனி செயலியை அறிமுகம் செய்து, அதில் உறுப்பினர்களாக இணையலாம் என்று அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் என பலரும் அதில் இணைந்து வருகின்றனர். விஜய்யின் இந்த ஸ்மார்ட்டான திட்டத்தில் பல லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி தளபதியின் தவெக என்று பிரபல ஜர்னலிஸ்ட் மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணி தெரிவித்திருப்பதாவது:

தமிழக பாஜகவில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக கூறுவது பொய். அதேபோல் எந்தக் கட்சிக்கும் 1 கோடி உறுப்பினர்கள் எல்லாம் இல்லை. எல்லாம் ஏமாற்றுகிறார்கள். ஆனால், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஓரளவு வலு உள்ளது.பவர்புல் கட்சிகள் என்றால் இவ்விரு கட்சிகள் தான். ஆனால் இவ்விரு கட்சிகளும் தங்களுக்கு 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படியில்லை.

இதில், ஓரளவு ஆச்சர்யப்படத் தக்க விஷயம் என்னவென்றால் விஜய். 60 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இதில் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் இணைந்துள்ளனர். அதில், பிராசஸ் வோட் ஐடி, ஆதார் ஐடியை அப்லோடு செய்யனும். அதற்கு ஒடிபி எண் வந்த பின் தான் உறுப்பினர் கார்டு கிடைக்கும். போலி உறுப்பினர்களைத் தடுக்க, இப்படி உறுப்பினர்களைச் சேர்த்திருக்கும் ஒரே கட்சி தவெக தான். திமுக, அதிமுகவுக்கு அவ்வளவு எண்ணிக்கை இல்லை. தேர்தலில் நின்று ஜெயிப்பது வேறு’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Post

வாழை இலை.. வெயிட் லாஸ் முதல் சரும ஆரோக்கியம் வரை உதவும் அதிசய சாறு.. தலைமுடி வளர்ச்சிக்கு வாழை இலை

Posted by - November 21, 2023 0
சென்னை: வாழையிலையில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த வாழையிலையை அரைத்து பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் அதைவிட ஏராளம்.. அவை என்னென்ன தெரியுமா? வாழையிலையில் உள்ள சத்துக்களை லிஸ்ட்…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்புவது எப்படி? – முழுவிபரம் இதோ

Posted by - December 8, 2023 0
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட தமிழக அரசு…

“தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்” – அலெர்ட் செய்த வானிலை மையம் – எங்கெல்லாம் தெரியுமா?

Posted by - April 6, 2024 0
சென்னை மற்று புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ்…

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *