தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்

176 0

திரு​வண்​ணா​மலை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார்.

திரு​வண்​ணா​மலை​யில் நேற்று நடை​பெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் இளைஞரணிச் செய​லா​ள​ரும், துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சேலத்​தில் நடந்த இளைஞரணி மாநாட்​டில் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், ‘உதயநிதி மட்​டும் எனது வாரிசு கிடை​யாது.

இங்கு கூடி​யுள்ள அனை​வரும் எனது கொள்கை வாரிசுகள்’ என்​றார். அத்​தகைய கொள்கை வாரிசுகள் இங்கு கூடி​யுள்​ளோம். திமுக​வில் மட்​டும்​தான் இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் மாநாடு​போல நடத்​தப்​படும். 75 ஆண்​டு​களைக் கடந்​துள்ள திமுக​வுக்கு இளைஞரணி மிகப் பெரிய பலமாகும்.

குஜ​ராத்​தில் அமித்ஷா பேசும்​ போது ‘பிஹாரில் வெற்றி பெற்​றுள்​ளோம். அடுத்து தமிழ்​நாடு​தான்’ என்று பேசி​யுள்​ளார். எவ்​வளவு மிரட்​டி​னாலும், அதை எதிர்​கொள்ள திமுக இளைஞரணி தயா​ராக உள்​ளது.

சிபிஐ, அமலாக்​கத் துறை, தேர்​தல் ஆணை​யம் என அரசு அமைப்​பு​களு​டன் கூட்​டணி வைத்​துக் கொண்​டு, தமிழகத்​தில் நுழையப் பார்க்​கிறது பாஜக. இப்​படிப்​பட்ட கட்​சியை நம்பி தேர்​தல் களத்​துக்கு வந்​திருக்​கிறார் பழனி​சாமி.

சென்​னை​யில் நடந்த அதி​முக பொதுக்​குழு​வில் 2026-ல் பழனிச்​சாமியை தமிழக முதல்​வ​ராக்​கு​வோம் என்று தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளனர். அதி​முக தற்​போது இன்​ஜின் இல்​லாதகாராக உள்​ளது.

பாஜக என்ற லாரி, அந்​தக் காரை கட்டி இழுத்​து செல்ல முயற்​சிக்​கிறது. எனவே, பழனி​சாமி முதலில் பாஜக​விடம் இருந்து அதி​முகவை காப்​பற்ற வேண்​டும். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் வேண்​டு​கோள் விடுக்​கிறேன்.

அடுத்த 4 மாதங்​களுக்கு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​களை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். வான​வில் அழகாக இருக்​கும். அதைப் பார்க்க மக்​கள் கூடு​வார்​கள். ஆனால், வான​வில் நிரந்​தரம் கிடை​யாது.

உதயசூரியன் தான் நிரந்​தரம். அது​தான் மக்​களுக்கு வெளிச்​சம் தரும். வரும் தேர்​தலில் திமுக​வின் வெற்றி சாதா​ரண​மாக இருக்​கக் கூடாது.

தமிழகத்​தில் உள்ள 70 ஆயிரம் பூத்​களி​லும் மிகப் பெரிய வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் திமுக கூட்​டணி வெற்​றி​பெற வேண்​டும். இவ்​வாறு உதயநிதி ஸ்டா​லின் பேசி​னார்.

Related Post

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Generated Image January 19 2026 11 05AM

தினகரனை வரவேற்கிறேன்” – இபிஎஸ்

Posted by - January 21, 2026 0
சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி…

எட்டாம் வகுப்பு மாணவன் மது போதையில் கலாட்டா: இது தான் திமுகவின் சாதனையா? – அன்புமணி

Posted by - April 4, 2026 0
“எட்டாம் வகுப்பு மாணவன் மது போதையில் கலாட்டா செய்துகொண்டிருக்கிறார். இது தான் திமுகவின் சாதனையா? முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி…

ஈபிஎஸ் உடன் தங்கமணி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்

Posted by - August 25, 2025 0
முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் சர்ச்சை கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன்  சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டார் அதிமுக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *