அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

155 0

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!

#Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia

          குற்றவாளிகளைப் போல கைது செய்யப்படும் கொடுமை! தமிழக வெற்றிக் கழகத்தின் கடும் கண்டனம். ‘கல்விமுறையின் பாதுகாவலர்கள் நாங்கள்’ என வாய்கூசாமல் மேடைக்கு மேடை முழங்குகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

           பக்கம் பக்கமாய் விளம்பரம் கொடுத்துபிரச்சாரம் செய்கிறது அவரின் விளம்பர மாடல் அரசு. ஆனால், முதலமைச்சரின் முழக்கங்கள் ஒலிக்கும் அதே தெருக்களில் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வரும் ஆசிரியப்பெருமக்களின் போராட்டக் குரலும் ஒலிக்கிறது.

                    ‘நாடு போற்றும் நான்காண்டு சாதனை’ என அவர் கட்சி விளம்பரம் செய்யும் அதே நாளிதழ்களில்தான் நித்தமும் போராடும் ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் போன்ற ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கைகள் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.  Former VCK leader Aadhav Arjuna joins Vijay's TVK, appointed party's poll management general secretary- The Week  

                இதையெல்லாம் முதலமைச்சர் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணம் அவரின் மெத்தனமா? இல்லை, பிரச்சனையின் தீவிரம் குறித்து முதலமைச்சர் அறியாதவகையில் தடுக்கும் சிலரின் சதியா? இத்தனைக்கும், போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில், ‘பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம்’ என்பதை 181-வது தேர்தல் வாக்குறுதியாகவும், ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்பதை 309-வது தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்தே, 2021-ல் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற மட்டும் ஏனோ அவர்களுக்குக் கசக்கிறது. அதைக் கேள்வி கேட்பவர்கள் முரட்டுத்தனமாய் கைது செய்யப்படுகிறார்கள். ‘சொன்னசொல் தவறமாட்டோம்’ என நீங்கள் போடும் வெற்று நாடகம் இனியும் மக்களிடையே எடுபடாது. ‘கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்’ என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு, அந்நோக்கத்தின் தொடக்கப்புள்ளியான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களையே குறிவைத்து 21.12.2023 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது.TETOJAC - DPI தொடர் முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - Asiriyar.Net

                          அதுநாள்வரை இருந்த ஆரம்பப் பள்ளி கட்டமைப்புகளையே அடித்து நொறுக்கும் வகையிலான அரசாணை அது. அதற்கு முன்புவரை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு என்பது அந்தந்த ஒன்றிய அளவில் பணிபுரிபவர்களுக்குள் பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. பணியிட மாறுதலும் அந்தந்த ஒன்றியத்திற்குள்ளேயே நடந்து வந்தது. ஆனால், தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணை எண் 243-ன் படி, ஒன்றிய முன்னுரிமை என்பது மாநில முன்னுரிமையாக மாற்றப்பட்டது. இதனால், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மாநில அளவில் பணியிட மாற்றம் என எங்கு வேண்டுமென்றாலும் தூக்கியடிக்கப்படலாம். பெரும்பாலான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பெண்கள். அவர்களால் எப்படி தங்கள் சொந்த ஊரிலுள்ள குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து வெகுதூரத்தில் இருக்கும் ஊரில் தங்கி பணியாற்ற முடியும்? ‘பதவி உயர்வு தந்தால், கூடவே இப்படி பணியிட மாற்றமும் செய்வார்கள்’ எனக் கருதி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வே வேண்டாம் என எழுதிக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒன்றிய அளவிலான பணி மூப்புப் பட்டியல் இந்த அரசாணை மூலம் மாநில அளவிலான பணி மூப்புப் பட்டியலாக மாற்றப்பட்டிருப்பதால் பதவி உயர்வு பெறுவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். இப்படி தங்களின் வாழ்வாதாரம் அத்தனையையும் பாதிக்கும் அரசாணையை எதிர்த்துதான் போராடி வருகிறார்கள் ஆசிரியர்கள்.

            Way2News Tamil                ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனைக் குரலை காது கொடுத்துக் கேட்காமல் அவர்களின்மேல் மாநிலம் முழுவதும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது ஆளும் தி.மு.க அரசு. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்ப தி.மு.க அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. இப்போது பணியில் இருப்பவர்களும் தங்களின் நியாயமானக் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கியிருப்பதால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உருவாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கல்வியே சமூக விடுதலைக்கான ஆயுதம்.திருப்பத்தூர்: பாரத ஸ்டேட் பேங்க் முன்பு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சாலை மறியல் போராட்டம்

                        அக்கல்வியைப் போதிக்கும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததும் அவர்களைத் தொடர்ந்து கைது செய்வதும் ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையே சிதைத்துவிடும். எனவே இனியும் காலம் தாழ்த்தாது ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் போன்ற ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் இதற்கான விலையை வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின்பேரில் தெரிவித்துக்கொள்கிறேன். ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர்- தேர்தல் பிரச்சார மேலாண்மை, தமிழக வெற்றிக் கழகம்…

இவ்வாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை குழு பொது செயலாளர் திரு.ஆதவ் அர்ஜுனா  தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

Related Post

Generated Image November 22 2025 10 25AM

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…
Gemini Generated Image p0wznkp0wznkp0wz

திருச்சியில் விஜய் வேட்பு மனு தாக்கல்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடல் 🔥 தமிழக அரசியல் சூடுபிடிக்குது!”

Posted by - April 2, 2026 0
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்,திருச்சி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள்,ஆதரவாளர்கள் திருச்சியில்…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…
Generated Image November 27 2025 10 12AM

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்

Posted by - November 27, 2025 0
Vijay  vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *