தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்..
தோசை பிடிக்காதவர்களை நம்மால் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. இட்லியை விரும்புவர்களைக் காட்டிலும் தோசை விரும்பிகளே அதிகம். பொதுவாக தோசைக்கு சட்னி சாம்பார் தொட்டு சாப்பிடுவது வழக்கம். மிஞ்சி போனால் பொடியை தொட்டு சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
கொத்து தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கனமான தோசை – 4
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 2
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
முட்டை – 2
புதினா, கறிவேப்பிலை – சிறிதளவு
கறிமசால்த்தூள் – ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும், பின்னர் அதில் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா போட்டு வதக்கவும். இத்துடன் தோசையை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்துப் போட்டு வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் உப்பு, முட்டை, மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள் போட்டுக் கலக்கி வைத்துக்கொண்டு வதக்கி வைத்துள்ள தோசையின் மீது ஊற்றிக் கொத்தி விட்டால் கொத்து தோசை ரெடி!
கூடுதல் குறிப்பு : புளிப்பு சுவையை விரும்புவோர் அடுப்பை அனைத்தவுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிடலாம். மேலும் இந்த தோசையில் மீதமிறுக்கும் வறுத்த / பெப்பர் சிக்கனை கூட சேர்த்து கிளறி சாப்பிடாலாம். சிக்கன் கொத்து பரோட்டாவிற்கு இணையான சுவையில் இருக்கும்.
- Home
- Trending Tamil
- தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!
Related Post
1Rs முதல் பொருட்கள்..கிச்சன் முதல் கம்பியூட்டர் வரை…
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்…
ரூ.1 கோடி கொடுத்து டைட்டிலை வென்றேனா? பிக்பாஸ் அர்ச்சனா கொடுத்த நச் பதில்
பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் விவகாரம் குறித்தும், பணம் கொடுத்து டைட்டில் வென்றதாக விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதிக பார்வையாளர்களை கொண்ட பிக்பாஸின் 7வது சீசன் கடந்த…
மது வெறியை கட்டுபடுத்தும் எளிய மருந்துகள்,மாத்திரைகள்- ஆய்வில் தகவல்.!
மது அளவை குறைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நபர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக இந்த மருந்து அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது எண்ணற்ற…
பூலாங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மைகள்? உடலுக்கு தரும் ஆரோக்கிய பலன்கள்
பூலாங்கிழங்கு – மறக்கப்பட்ட ஆரோக்கிய உணவு! தமிழகத்தில் பழமையான இயற்கை உணவுகளில் ஒன்றாக கருதப்படும் பூலாங்கிழங்கு தற்போது மீண்டும் health food ஆக பிரபலமாகி வருகிறது. குறிப்பாக…
ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!
நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற…
Categories
- Sports (85)
- TN Political Zone (337)
- Trending Tamil (708)
- Viral Social (12)
- அரசியல் (212)
- இந்தியா (476)
- உலகம் (174)
- சினிமா (825)
- தமிழ்நாடு (1,129)
Recent Posts
- CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு – சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?

- ’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்

- ”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக – தவெக மீது அட்டாக்

- Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?

- Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ – வெளுத்துவிட்ட உதயநிதி


