நாடு முழுவதும் வேண்டாம் மோடி முழக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

266 0

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மாநில அரசுகளை மதிக்கும் அரசு மத்தியில் அமையவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

வேண்டாம் மோடி என்று முழக்கமே இந்தியா முழுமைக்கும் எதிரொலித்துக் கொண்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தற்போது மாநிலம், மாநிலமாக சென்று பிரதமர் மோடி திட்டங்களை தொடங்கி வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமரின் அவசர கால பதற்றம், அவர் முகத்தில் இருக்கும் பயத்தை காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில், 5 ஆவது முறையாக வெற்றிக் கூட்டணி தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், அனைத்து தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்பதை மனதில் வைத்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன்! – நெல்லையில் பிரதமர் மோடி ஆவேசம்!

Posted by - April 16, 2024 0
இதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜி20 உள்ளிட்ட…

”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” – இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?

Posted by - June 25, 2025 0
இந்து மதம் என்பதே 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லை என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என அரசியலமைப்பு சட்டம்…

“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்!” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

Posted by - February 28, 2024 0
கோவை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர். வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள்…
Generated Image January 19 2026 11 05AM

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…

“தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள்“ – அமித்ஷா பகிரங்க குற்றச்சாட்டு!

Posted by - April 13, 2024 0
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மட்டும் தான் தமிழ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *