tvksenthilbalaji

Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?

56 0

Senthil Balaji : தவெக ஆட்சியை கவிழ்க்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சி செய்வதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியையும், அவரது சகோதரரையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தொடரும் அரசியல் மாற்றம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாள் முதல் தினந்தோறும் புதிய, புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கொள்கை கூட்டணி என கூறி வந்த திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒட்டுமொத்தமாக தவெகவிற்கு பல்டி அடித்தது, மட்டுமில்லாமல் திமுகவை மோசமாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. அடுத்ததாக அதிமுகவிலும் உட்கட்சி மோதல் காரணமாக 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த திருப்பமாக தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக சதி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவெகஆட்சியை கவிழ்க்க சதி

இது தொடர்பாக சென்னை போலீசார் கூறுகையில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான Dr.N.இளையராஜாவை  சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர்,மிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

திமுகவினரை கைது செய்த போலீஸ்

இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா எனக்கு விருப்பமில்லை என தெரிவித்து சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் அளித்ததாகவும், இந்த புகாரின் பேரில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சதியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான V.செந்தில்பாலாஜியின் சகோதரர் V.அசோக்குமார் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியை தேடும் போலீஸ்.?

இந்த நிலையில்,த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட செந்தில்பாலாஜியை போலீஸ் தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீசார் கரூரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அசோக் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கரூரில் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடு, பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் சென்னை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கரூரில் உள்ள இடங்களில் செந்தில்பாலாஜியை போலீசார் தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Post

கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்

Posted by - December 8, 2025 0
அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகராட்சி…

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

Posted by - September 16, 2025 0
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு…
Generated Image November 27 2025 10 36AM

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…
tn

🔴LIVE | TN Budget 2026 | தொடங்கியது இடைக்கால பட்ஜெட் தொடக்கம் | MKStalin | TN Assembly

Posted by - February 17, 2026 0
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள, நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *