UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

252 0

ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம்.

ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆனால் நாளாக நாளாக தற்போது பெரும்பாலான மக்கள் UPI ட்ரான்ஸாக்ஷன்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். கையில் பணத்தை எடுத்துச் செல்வதற்கான தேவையை இது தவிர்க்கிறது. மொபைல் மட்டும் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற ஒரு தைரியத்தை UPI ட்ரான்ஸாக்ஷன் நமக்கு கொடுத்திருக்கிறது. தற்போது வரை நாம் செய்யக்கூடிய UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு நாம் எந்த ஒரு கட்டணமும் செலுத்துவதில்லை.

ஆனால் இதுவே UPI ட்ரான்ஷாக்ஷன்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டால் அதனை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்பது சம்பந்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நபர்கள் ட்ரான்ஸ்ஷாக்ஷன் கட்டணம் விதிக்கப்பட்டால் UPI பயன்படுத்துவதையே நிறுத்தி விடுவோம் என்று கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு சம்பந்தப்பட்ட ஒரு சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

எனினும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு மக்கள் ஏற்கனவே தாங்கள் செய்த ஒரு சில UPI பேமெண்ட்களுக்கு ஒருமுறை அல்லது பலமுறை ட்ரான்ஸாக்ஷன் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

– இந்த கருத்து கணிப்பில் 364 மாவட்டங்களை சேர்ந்த 34,000 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பிற்கு 67% ஆண்களும், 33 சதவீத பெண்களும் பதில் அளித்துள்ளனர்.

– ஆகஸ்ட் 2022-ல் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) பல்வேறு தொகை சம்பந்தப்பட்ட UPI பேமெண்ட்களுக்கான கட்டணங்கள் சார்ந்த ஒரு விவாத தாளை வெளியிட்டது.

– RBI வெளியிட்ட இந்த விவாத தாளை அடுத்து, UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்ற ஒரு விளக்கத்தை நிதித்துறை அனைவருக்கும் வழங்கியது.

Related Post

2025ல் கேபிள் டிவிக்கு குட்பை! ரூ.175 க்கு 16 OTT, 350 TV சேனல்களை இறக்கிய Vodafone! ரூ.154 க்கும் கிடைக்கும்!

Posted by - January 7, 2025 0
ஏற்கனவே ஓடிடி (OTT) தளங்களின் எண்ணிக்கையும், அவைகளின் சந்தாதார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. போகிற போக்கை பார்த்தால் கேபிள் டிவி (Cable TV) என்கிற…

பஞ்சாபில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.22½ லட்சம் கொள்ளை

Posted by - February 17, 2023 0
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில்…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

ஆசிரியரை சீரழித்த மாணவி.. 7 ஆண்டுகளுக்குப்பின் வெளியான பின்னணி.. கேரளாவில் பரபரப்பு…

Posted by - April 19, 2025 0
கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டால், ஒரு ஆசிரியரின் வாழ்க்கை சீரழிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்த அந்த சம்பவத்தால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது. அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன…
Generated Image January 10 2026 4 18PM

குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு..

Posted by - January 10, 2026 0
குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *