நான் ஃபினிஷர் தான்டா..! தோனியின் 5 வருட காத்திருப்பு, மூச்சு விடும் சென்னை – ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

222 0

தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2019ம் ஆண்டிற்குப் பிறகு..

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி நேற்று களமிறங்கியது. கடந்த சில போட்டிகளில் இல்லாத அளவில் ஒழுக்கத்துடன் பந்துவீசியது மற்றும் அனுபவம் வாய்ந்த கேப்டன்சியால்,  166 ரன்களுக்குள் எதிரணியை முடக்கியது. இலக்கை நோக்கி களமிறங்கிய போது கடந்த சில போட்டிகளில் கிடைக்காத, வலுவான தொடக்கம் அமைந்தது. இளம் வீரர் ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய தோனி 11 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். ஃபீல்டிங்கின் போதும் 3 விக்கெட்டுக்ளை வீழ்த்த உதவி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததால் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டிற்கு பிறகு, தோனி ஆட்டநாயகன் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.

மூச்சு விடும் சென்னை:

முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியுற்று சென்னை அணி தடுமாறியது. அதில் 3 போட்டிகள் உள்ளூர் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றவை. கடைசியாக தோனி தலைமையில் இறங்கியபோதும் மோசமான தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் தான், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இது அந்த அணிக்கு பெரும் உத்வேகம் அளித்துள்ளது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சென்னை தொடர்ந்து 10வது இடத்திலேயே நீடிக்கிறது. இதையடுத்து சென்னை அணி வரும் 20ம் தேதி மும்பை அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது.

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:

அணிகள்போட்டிவெற்றிதோல்விரன்ரேட்புள்ளிகள்
குஜராத் டைட்டன்ஸ்642
டெல்லி கேபிடல்ஸ்5411.006 8
 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு6420.672 8
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்7430.086 8
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்6330.803 6
பஞ்சாப் கிங்ஸ்5320.0656
மும்பை இந்தியன்ஸ்6240.0274
 ராஜஸ்தான் ராயல்ஸ்624-0.838 4
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்624-1.2454
சென்னை சூப்பர் கிங்ஸ்725-1.276 –4

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை, பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் முறையே புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6வது இடங்கலில் உள்ளன. நியூ சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் அதிகபட்சம் இரண்டாவது இடம் வரை புள்ளிப்பட்டியலில் முன்னேறக்கூடும். ஒருவேளை பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அதிகபட்சம் 4வது இடம் வரை முன்னேறக்கூடும்.

Related Post

சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!

Posted by - April 25, 2025 0
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. சின்னசாமி மைதானத்தில்…

சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ! – தோனி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - May 24, 2024 0
தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று…
Generated Image February 16 2026 10 25AM

பாகிஸ்தானின் பரிதாபம்.. போற போக்கில் வெற்றி பெற்ற இந்தியா!

Posted by - February 16, 2026 0
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா கால்தடம் பதித்தது. IND vs PAK…
d

தோனி ‘7’ம் நம்பர் ஜெர்சியை மாற்றுவதன் பின்னால்… இப்படி ஓர் பின்னணி இருக்கா?

Posted by - March 18, 2026 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியதில் இருந்தே தோனி 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ஆம்…

பழி தீர்க்க காத்திருக்கும் ரோகித் படை! – பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா தோனி படை..!

Posted by - May 6, 2023 0
 ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை மும்பை அணி எட்டிப் பிடித்து அசத்தியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *