நாலு குறும்படம் போட்டுருந்தா கூட இந்த சீசன் நல்லா போயிருக்கும்.. சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ் 8

226 0

விஜய் சேதுபதி வந்த பிறகாவது இந்த சீசன் நல்லா இருக்கும்னு பார்த்தா படுமோசமா இருக்கே. இது தான் பிக்பாஸ் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் போது பாரபட்சமாக இருக்கிறது என ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தது.

அதற்கேற்றார் போல் இந்த எட்டாவது சீசனில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த சுவாரஸ்யமான சம்பவங்களும் இல்லை முழுக்க முழுக்க போட்டியாளர்கள் வன்மத்தை மட்டும் தான் காட்டுகின்றனர் ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிக்கும் வகையில் இருந்த நிகழ்ச்சி இப்போது சூர மொக்கையாக உள்ளது.

அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்கூல் டாஸ்க் இன்னும் மோசம். மூன்றாவது சீசனில் சாண்டி, கவின் இருந்தபோது எவ்வளவு ஜாலியாக இருந்தது. ஆனால் இந்த சீசன் போட்டியாளர்கள் ஒருவர் கூட சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ்

அதேபோல் வார இறுதி நாட்களில் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யமும் இல்லை. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதையே சிலர் தவிர்த்து விட்டனர். ஏனென்றால் முந்தைய சீசனில் அவ்வப்போது குறும்படம் போட்டு சுவாரசியத்தை அதிகப்படுத்துவார்கள்.

ஆனால் இந்த சீசனில் அது மிஸ்ஸிங். ஒரு நாலு குறும்படம் போட்டு காட்டி இருந்தா கூட நிகழ்ச்சி விறுவிறுப்பா மாறி இருக்கும். ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல் விஜய் சேதுபதியே அனைத்தையும் சொல்லிவிடுகிறார்.அதேபோல் ஆண் பெண் என இரு அணிகளாக வீடு பிரிந்து இருக்கிறது. இதுவும் சுவாரஸ்ய குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இருதரப்பும் போட்டி போட்டுக் கொண்டு வன்மத்தை கக்குகின்றனர்.

அதில் ஆண்கள் அணி பெண்களை எப்போதும் டாமினேட் செய்வதில் தான் குறியாக இருக்கிறது. இப்படியாக செல்லும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் கடினமான மற்றும் சுவாரஸ்யமான டாஸ்க் கொடுத்தால் தலை தப்பும்.

அதேசமயம் விஜய் சேதுபதி வந்தபோது அனைவரும் வரவேற்பு கொடுத்தார்கள். இப்போது பார்த்தால் உலகநாயகனே இருந்திருக்கலாம் என இரு மாறுபட்ட மனநிலையில் இணையாவாசிகள் இருக்கின்றனர்.

Related Post

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Posted by - அக்டோபர் 8, 2024 0
#Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - பிப்ரவரி 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக்

Posted by - மார்ச் 3, 2023 0
பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை…

மீண்டும் வருகிறதா ஆதி குணசேகரன் கேரக்டர்.. எப்படி இருக்கு எதிர்நீச்சல் சீரியல்… டி.ஆர்.பி. ரேட்டிங் நிலவரம் இதுதான்!

Posted by - செப்டம்பர் 25, 2023 0
மாரிமுத்துவின் கேரக்டருக்கு சரியான நபர் கிடைத்தால் குணசேகரன் மீண்டும் என்ட்ரி ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன