Gemini Generated Image brdq6zbrdq6zbrdq

பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ…

170 0

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு கூட்டணியை இறுதி செய்துள்ளது அதிமுக, கூட்டணி கட்சிகளான பாஜகவிற்கு 27 தொகுதியும், பாமகவிற்கு 18 தொகுதியும், அமமுகவிற்கு 11 தொகுதியும், தமாகாவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள 23 பெயர்களை கொண்ட  முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக வருகிற 28ஆம் தேதி அடுத்தக்கட்ட பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

யாருக்கெல்லாம் வாய்ப்பு.?

இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் யார் யாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற உத்தேச பட்டியலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

பாஜகவில் யாருக்கு வாய்ப்பு.?

1. மயிலாப்பூர் – தமிழிசை
2. கோவை வடக்கு – வானதி
3. தளி – அமர்பிரசாத் ரெட்டி
4.உதகை – இட்டக்கல் போஜராஜ்
5.அவிநாசி (தனி) – எல் முருகன்
6.திருப்பூர் தெற்கு – AP முருகானந்தம்
7. மொடக்குறிச்சி – கிருத்திகா சிவக்குமார்
8. கந்தர்வகோட்டை (தனி) – புரட்சி கவிதாசன்
9.புதுக்கோட்டை – ராமச்சந்திரன்
10.திருப்பத்தூர் – மேபுல் சத்யநாதன்
11.மதுரை தெற்கு – பேராசிரியர் சீனிவாசன்
12.சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
13.திருச்செந்தூர் – KRM ராதாகிருஷ்ணன்
14.வாசுதேவநல்லூர் – ஆனந்தன் அய்யாசாமி
15.ராதாபுரம் – கரு நாகராஜன் (அல்லது) பாலகிருஷ்ணன்
16.நாகர்கோயில் – காந்தி (அல்லது) பொன் ராதாகிருஷ்ணன்
17.விளவங்கோடு – விஜயதாரணி
18.ஆவடி – ராஜசிம்மன் மகேந்திரா என்கிற அஸ்வின் குமார்
19.திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்
20.தஞ்சை – கருப்பு முருகானந்தம்
21.திருவாரூர் – பண்ணை வயல் இளங்கோ அல்லது பேட்டை சிவா
22.அறந்தாங்கி – ராமசாமி அல்லது கவிதா சீனிவாசன்
23.மானாமதுரை (தனி) – பொன் பாலகணபதி
24.ராமநாதபுரம் – ஜி பி எஸ் நாகேந்திரன்
25.குளச்சல் – சிவக்குமார்
26.பத்மநாபபுரம் – எட்வின் ஜோஸ்
27.ராசிபுரம் (தனி) – வி பி துரைசாமி அல்லது அவரின் மகன் பிரேம்

 

Related Post

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

97.37 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டது

Posted by - December 20, 2025 0
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) பணிக்குப் பிறகு, மாநில முழுவதும் 97,37,832 பேர் வழக்கமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் புதிய…
erthjhgfdsaq

வாக்கு எண்ணிக்கை மையங்களில் திடீர் மாற்றம்? தேர்தல் ஆணையத்தின் நள்ளிரவு உத்தரவு – கலக்கத்தில் வேட்பாளர்கள்!

Posted by - April 25, 2026 0
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து, தற்போது அனைவரின் கவனமும் வாக்கு எண்ணிக்கை மையங்களின் (Counting Centers) மீது திரும்பியுள்ளது.…

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

Posted by - December 30, 2025 0
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும்…
SSS

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

Posted by - April 13, 2026 0
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *