பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில் தகவல்

342 0

பெங்களூரு :

பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திரனின் வஜ்ராவையும் (ஆயுதம்) அவர் காட்டினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில்அதிபராக இருந்து வருகிறேன். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இரும்பு தாது மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்க தொழிலை செய்து வருகிறேன்.பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு  பழமையானது: ஆய்வில் தகவல் | Thousands of years old trident, diamond weapon  found in Philippines

அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே 5-ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள என்னுடைய சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி அப்போது எனக்கு தெரியாது.

அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக வழங்கி இருந்தேன். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி துறையிடமும், இதற்கான அனுமதியை பெற்றேன். கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை அந்த திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.

7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம், சிலை பழமையானது என்பதை தெரிவித்துள்ளன. இது இந்தியா மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களை சந்தித்து காட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023 0
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…
tata cars

டாடா சியாரால EV வந்தா நல்லா இருக்கும்னு வெயிட் பண்றீங்களா.?

Posted by - February 14, 2026 0
புதிய டாடா சியரா EV, வலுவான தோற்றம், நீண்ட தூரம் பயணிக்கும் திறன் மற்றும் நம்பகமான பிராண் பெயரைக் கொண்ட மின்சார SUV-யைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு…

கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம்: அரசு பியூன் வேலைக்காக குவிந்த என்ஜினீயர்கள்- பி.டெக் பட்டதாரிகள்

Posted by - October 28, 2023 0
கொச்சி: இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து…

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

அதிமுகவில் மீண்டும் வெடிக்குமா உட்கட்சி பூசல்… முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு…

Posted by - February 12, 2025 0
அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால், மீண்டும் உட்கட்சி பூசல் வெடிக்குமா என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *