மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

186 0

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் மகளிருக்கான திட்டங்கள்:

ஒரு சமூகத்தில் வளர்ச்சி என்பதை அந்த சமூகத்தில் வாழும் பெண்களின் வளர்ச்சியை பொறுத்துதான் என்பது டாக்டர் அம்பேத்கரின் கூற்று. தமிழக அரசும் அதை நோக்கியே பல்வேறு நலத்திட்ட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் கோப்பிலேயே முதலாவதாக கையெழுத்திட்டார். அதைதொடர்ந்து, தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000, பள்ளி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தோழி விடுதிகள் என பெண்கள் வளர்ச்சிக்கு அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடைமுறைத்தி வருகிறது.

மகளிருக்கு மேலும் ஒரு சலுகை:

தமிழ்நாடு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில், மகளிர் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். இலவச பயண வசதி பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி உள்ளதாகவும், அடுத்தவரை சார்ந்து இருக்கும் சூழலை தவிர்க்க உதவுவதாகவும் அரசு தெரிவித்து வருகிறது. இதை குறிப்பிட்டு தனது தலைமையிலான அரசு, மகளிருக்கான அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டி வருகிறார். அதேநேரம், பெண்கள் கையில் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு இலவசம் பயணம் கிடையாது. எடைக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் தான், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டணமின்றி இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கண்காட்சிக்கான பொருட்கள், விளைபொருட்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த, அவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லக்கேஜ் உடன் இலவசமாக பயணிக்கலாம்..!

போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 100 கிலோ மிட்டர் தூரம் பயணிக்கும் பேருந்துகளில் 25 கிலோ வரையிலான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கொண்டு செல்லும் லக்கேஜுக்கு கட்டணம் கிடையாது.

மகளிர் சுய உதவிக் குழு பெண்களை மரியாதை குறைவாக நடத்தாமல் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்களுக்கும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள், பேருந்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக உள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என பயணிகளுக்கும் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

இது மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த உதவுவதோடு, கைகளில் பணம் சேரவும் ஊக்குவிக்கும். இதன் மூலம் பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை சுயமாகவே பூர்த்தி செய்துகொள்ள முடியும். அடுத்தவரை நாடவேண்டும் என்ற சூழலும் தவிர்க்கப்படும்.

Related Post

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்

Posted by - April 18, 2025 0
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர்…

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

ரேஷன் அரிசி இல்லாதபோது ஃபேஷன் ஷோ எதுக்கு? செவ்வாய்க்கு செங்கல்வராயன் ஏன்? பார்த்திபன் ஆதங்கம்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் எக்ஸ் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது: நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப…

சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட் பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை

Posted by - November 3, 2023 0
சென்னை: ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி. நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்..…

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

Posted by - April 26, 2024 0
காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!! பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *