மண்ணை ஆள்றவனுக்கு தான் எல்லை, மண்ணை அள்றவனுக்கு இல்லை.. ‘பத்து தல’ டீசர்..!

262 0

சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிம்புவின் பின்னணி குரலில் வெளியாகி உள்ள இந்த டீசரின் காட்சிகள் அதிரடி ஆக உள்ளன என்பதும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு சரியான விருந்தளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆவேசமாக தோன்றும் காட்சிகள் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலையே ஏற்படுத்தியுள்ளது.

pathuthala trailer3032023m1.jpg?w=700&dpr=1

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் அட்டகாசமான பின்னணி இசை, பரூக் பாஷாவின் ஒளிப்பதிவிள் உருவாகிய இந்த டீசர் நிச்சயம் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pathuthala trailer3032023m2.jpg?w=700&dpr=1

சிம்பு கௌதம், கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

pathuthala trailer3032023m3.jpg?w=700&dpr=1

இந்த டீசரில் சிம்புவின் குரலில் இடம்பெற்றுள்ள வசனம் இதுதான்:

மூன்று கடல் கூடுகிற குமரி கண்டத்தில் இந்த ஏஜி இராவணன் ஆட்சி தான் நடக்கிறது என்று எல்லா பயலுக்கும் தெரியும் இல்ல, மண்ணை ஆள்பவருக்கு தான் எல்லை, மண்ணை அள்ற எனக்கு இல்லை

நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சு மேல வந்தவன், என்னால எத்தனை பேர் செத்தான்னும் தெரியாது எத்தனை பேரு வாழ்ந்தான்னும் தெரியாது..

Related Post

‘பகாசூரன்’ விமர்சனம்: ‘யாரோடும் ஒப்பிடாதீங்க…’ இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

Posted by - February 18, 2023 0
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி…

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

Posted by - April 6, 2023 0
ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Posted by - March 28, 2025 0
விஜய் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று…

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ்

Posted by - March 17, 2023 0
சமந்தா தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம்…
Generated Image January 07 2026 11 05AM

விஜய் அண்ணா ஜெயிச்சிட்டீங்க, ஜெயம் ரவி போட்ட சூப்பர் பதிவு… செம வைரல்

Posted by - January 7, 2026 0
ஜனநாயகன் தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் ஜனநாயகன். விஜய் நடித்துள்ள படம் என்றாலே மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள் ரசிகர்கள், அதிலும் இந்தப்படம் அவரது கடைசிப்படம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *