மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது…

255 0

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக, மீண்டும் ஒரு முறை, வாக்களித்த மக்களை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை கூறிருப்பதாவது :

ஆண்டு தோறும் தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் அதே அலங்கார வார்த்தைகளைத் தவிர, தமிழக அரசு சார்பில் உருப்படியான திட்டங்கள் என ஒன்றுமே இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த அதே திட்டங்கள், இதுவரை செயல்படுத்தப்படாமல், புதிய திட்டங்களைப் போல ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் திமுக ஒதுக்கியதாகத் தெரியவில்லை.

திமுகவின் நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசின் நலத் திட்டங்களை நீக்கி விட்டால், எஞ்சியிருப்பது. பேருந்து நிலையத்துக்குப் பெயர் வைப்பதும், ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்பு அளவிலேயே நிற்கும் விளம்பரங்களும் மட்டும்தான்.

மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் வைப்பது, அல்லது. மத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது என, மத்திய அரசின் திட்டங்களை, தங்கள் சிந்தனையில் உதித்தது போலக் காட்டிக் கொள்ளும் திமுக, தொலைநோக்குப் பார்வை இல்லாததால், தங்கள் நாடகத்தை முழுமையாக அரங்கேற்ற முடியாமல் மாட்டிக் கொள்வதுதான் நகைச்சுவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Post

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்

Posted by - March 8, 2025 0
மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை போலீசார் கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை…

பாஜக-வை கழட்டிவிடுங்க… விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?

Posted by - July 14, 2025 0
அதிமுக கூட்டணியைப் பலப்படுத்த பாஜக-வுடனான உறவை துண்டித்துவிட்டு, விஜய்யின் தவெக-வை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வலுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு…

கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்

Posted by - July 3, 2025 0
சிவகங்கை லாக்-அப் மரணம் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டாதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை லாக்-அப் மரணம் வழக்கில்  பிரச்னையை முடிந்த அளவில்…
Generated Image February 16 2026 7 37PM

வாய் தவறி வந்துடுச்சு.. திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Posted by - February 16, 2026 0
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்யை நயினார் விமர்சித்து பேசும்போது “அவர் வீட்டை…

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்

Posted by - January 30, 2025 0
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *