ஜோடிக்கப்பட்ட ஒன்று… ஆடியோ சர்ச்சை குறித்து பி.டி.ஆர் விளக்கம்

314 0

ஆடியோ சர்ச்சை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக பேசுவதன் மூலம் பெயர் பெற்றவர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்கருத்து கொண்டவர்களை விமர்சிக்கிறார் என்று விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 விநாடிகள் கொண்ட ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த வீடியோவில், ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியது போல இருந்தது. அந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அக்கட்சி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் பகிர்ந்திருந்தனர். இதுகுறித்து தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர். இந்தநிலையில், ஆடியோ விவகாரம் குறித்து பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆடியோ எளிதாக கிடைக்கும் நவீன தொழில்நுட்பம் மூலம் இட்டுக்கட்டப்பட்டது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் ஆடியோ, வீடியோக்கள் வெளியாவதில் ஆச்சரியமில்லை.

எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் பேச்சு சுதந்திரம் மிகவும் அவசியம் என்று உறுதியாக நம்புவன் நான். எனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான நான் ஒருபோதும் காவல்துறையில் வழக்குத் தொடர்ந்ததில்லை. என்னுடைய மூதாதையர்கள் குறித்து தவறாக பேசியதற்காக மட்டும் ஒரே ஒருமுறை எதிர்கட்சி எம்.எல்.ஏ மீது வழக்குத் தொடர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் என் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சிறிய குற்றச்சாட்டுகள் முதல் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் ஒருபோதும் எதிர்வினை ஆற்றியதில்லை. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது. தற்போது கிடைக்கும் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

ASDFGH

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்

Posted by - March 18, 2025 0
செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தாலும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு ஒன்றிணைந்து அனைவரும் திமுகவை எதிர்க்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. என்னதான் உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் என் விஸ்வாசம் அதிமுகவுக்கு…
Gemini Generated Image mqant6mqant6mqan

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - March 31, 2026 0
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு 3 கோடியே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *