மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

362 0

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30-ந்தேதி சுமித்ரி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு பாரத் மிஸ்ரா போன் செய்து கூறியுள்ளார்.Suggestions for making the Police Investigation more effective and  efficient with minimal scope of any lapse – Radhey Krishna Legal Aid  Foundation

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமித்ரியின் குடும்பத்தினர் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பாரத் மிஸ்ரா தனது மனைவியின் உடலை பிரீசரில் வைத்து விட்டாராம். இது சுமித்ரியின் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது சகோதரர் அபய் திவாரி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது மைத்துனருக்கும், எனது சகோதரிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தான் எனது சகோதரி மர்மமான முறையில் இறந்துள்ளார். உடனடியாக அவர் எனது குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ தகவல் தெரிவிக்காமல் தாமதமாக கூறியுள்ளார். அவர் எனது சகோதரியை அடித்து கொலை செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாரத் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுமித்ரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது இறுதி சடங்குக்காக தங்கள் மகன் மும்பையில் இருந்து திரும்ப வேண்டி இருந்ததால் மனைவியின் உடலை பிரீசரில் வைத்து இருந்ததாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து சுமித்ரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா உடலை அவரது காதலன் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு சில நகரங்களில் இதே பாணியில் நடைபெற்ற கொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் அதே போல இந்த சம்பவத்திலும் சுமித்ரியை அவரது கணவர் கொன்று பிரீசலில் அடைத்து வைத்ததாக புகார் கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எருமை மாடு- ராஜஸ்தானில் ருசிகர சம்பவம்

Posted by - August 11, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து…

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடம்

Posted by - April 4, 2023 0
புதுடெல்லி : ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு,…

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

Posted by - August 24, 2023 0
புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர்…

படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி

Posted by - September 4, 2023 0
புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி…

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *