வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?

166 0

2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் வென்றெடுத்தது. ஆனால், இந்த முறை அப்படி விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கோவைக்​கென சிறப்​புத் திட்​டங்​களை அறி​வித்த முதல்​வர், கோவை மாவட்​டத்​துக்​கான பொறுப்பு அமைச்​ச​ராக செந்​தில்​பாலாஜியை​யும் நியமித்​தார். வழக்கு காரண​மாக செந்​தில் ​பாலாஜி அமைச்​சர​வையி​லிருந்து வில​கி​னாலும் இன்​ன​மும் அவர் கோவை மாவட்ட பொறுப்​பாள​ராகவே நீடிக்​கி​றார். கூடு​தலாக மண்டல பொறுப்​பை​யும் அவருக்கு வழங்கி இருக்​கி​றார் ஸ்டா​லின்.கோவை மாவட்ட பொறுப்பு அமைச்​ச​ராக வந்​ததுமே உள்​ளாட்​சித் தேர்​தலிலும் மக்​கள​வைத் தேர்​தலிலும் கோவை​யில் திமுக-வை ஜொலிக்க வைத்து ஸ்டா​லினின் குட்​புக்​கில் இடம்​பிடித்​தார் செந்​தில்​ பாலாஜி. இப்​படி​யான சூழலில், கோவை​யில் செந்​தில்​பாலாஜி தனக்​கென ஓர் ஆதரவு வட்​டத்தை உரு​வாக்கி புது கோஷ்டியை வளர்ப்​ப​தாக​வும் கட்​சிப்​ப​த​வி, அரசுப் பதவி​களுக்கு அவர்​களை முன்​னிலைப்​படுத்​தவ​தாக​வும் கோவை திமுக-​வினர் மத்​தி​யில் இருந்து அதிருப்​திக் குரல்​கள் ஒலிக்​கத் தொடங்கி இருக்​கின்​றன.இதுகுறித்து நம்​மிடம் பேசிய கோவை திமுக-​வினர் சிலர், “தி​முக எதிர்க்​கட்​சி​யாக இருந்த போது எங்​களைப் போன்​றவர்​கள் பதவி​யில் இருந்​தோம். கட்​சிக்​காக பல்​வேறு போராட்​டங்​களில் பெங்​கெடுத்து சிறை சென்​றிருக்​கி​றோம். ஆனால், திமுக ஆளும் கட்​சி​யாக வந்த பிறகு படிப்​படி​யாக எங்​களை ஓரங்​கட்டி எங்​களது பதவி​களை​யும் பறித்​து​விட்​டார்​கள். செந்​தில்​பாலாஜி திமுக-வுக்கு வந்த பிறகு, மாற்​றுக் கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் திமுக-​வில் இணை​யும் நிகழ்​வு​கள் தொடர்ச்​சி​யாக நடந்து கொண்​டிருக்​கிறது.

என்ன உத்​தர​வாதம் கொடுத்து அவர்​களை எல்​லாம் கட்​சி​யில் சேர்க்​கி​றார்​கள் என்று தெரிய​வில்​லை. பிற கட்​சிகளில் ஆக்​டி​வாக இருப்​பவர்​கள் மட்​டுமல்​லாது அங்கே ஓரங்​கப்​பட்​ட​வர்​களை​யும் திமுக-வுக்கு கூட்​டிவந்து பிர​தானப்​படுத்​துகி​றார்​கள். இவர்​களில் பெரும்​பாலான​வர்​களுக்கு வந்த வேகத்​திலேயே கட்​சிப் பதவி​களை​யும் கொடுக்​கி​றார்​கள். இவர்​களுக்​காக, ‘ஒரிஜினல்’ திமுக-​வினரை டம்மி பொறுப்​பு​களுக்கு மாற்​றுகி​றார்​கள். சிலரை பொறுப்​பு​களை விட்​டும் தூக்​கு​கி​றார்​கள்.

அதி​முக-வைச் சேர்ந்த முன்​னாள் எம்​பி-​யான ஏ.பி.​நாக​ராஜன், முன்​னாள் மேய​ரான கணபதி ப.ராஜ்கு​மார், முன்​னாள் எம்​எல்​ஏ-​வான ஆறுகுட்​டி, முன்​னாள் கவுன்​சிலர் செந்​தில் என்ற கார்த்​தி​கேயன், தேமு​திக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான தினகரன், முன்​னாள் மக்​கள் நீதி மய்ய நிர்​வாகி​யான மருத்​து​வர் மகேந்​திரன், நாதக-​வில் இருந்து வந்த ராஜீவ்​காந்தி உள்​ளிட்ட அனை​வ​ருமே கட்​சி​யில் சேர்ந்த வேகத்​தில் திமுக-​வில் உயர்ந்த இடத்​துக்கு உயர்த்​தப்​பட்​டார்​கள். கணபதி ராஜ்கு​மாரை தனது சிபாரிசில் எம்​பி-​யாகவே ஆக்​கி​னார் செந்​தில்​பாலாஜி. ஆறு குட்​டி​யின் மகன் அசோக் கோவை வடக்கு மாவட்ட திமுக துணைச் செய​லா​ள​ராக நியமிக்​கப்​பட்​டார்.

2021 தேர்​தலில் திமுக-வுக்கு எதி​ராக போட்​டி​யிட்டு வாக்​கு​களை பிரித்த மகேந்​திரன் இப்​போது திமுக ஐடி விங்க் மாநில இணைச் செய​லா​ள​ராக இருக்​கி​றார். நாதக ராஜீவ்​காந்தி திமுக மாநில மாண​வரணி செய​லா​ள​ராக இருக்​கி​றார். தேமு​திக வரவான தளபதி முரு​கேசன் இப்​போது கோவை தெற்கு மாவட்ட திமுக செய​லா​ளர். ஏன், இந்​தப் பதவிக்​கெல்​லாம் காலங்​கால​மாக கட்​சிக்​காக உழைத்த அசல் திமுக-​வினர் யாருமே லாயக்​கில்​லை​யா? மாற்​றுக் கட்​சிகளில் இருந்து வந்​தவர்​களுக்கு தான் முன்​னுரிமை தர வேண்​டு​மா?

முதல்​வரோ, துணை முதல்​வரோ, மற்ற அமைச்​சர்​களோ கோவைக்கு வந்​தால் அவர்​களைப் பார்க்க எங்​களுக்கு அனு​மதி கிடைக்​கிறதோ இல்​லையோ மேற்​கண்ட ஜம்​பிங் மாஜிக்​கள் எளி​தாகச் சந்​தித்​து​விடு​கி​றார்​கள். அதேசம​யம், இவர்​களில் பலரும் செந்​தில்​பாலாஜி கோவைக்கு வரும்​போது மட்​டும் வந்து சீன் போட்​டு​விட்டு மற்ற நேரங்​களில் தங்​களது வேலை​களைப் பார்க்​கப் போய்​விடு​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், 2026 தேர்​தலில் கோவை​யில் சீட் பிடிக்​க​வும் இந்த மாஜிக்​களில் சிலர் இப்​போது ஆள்​பிடித்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள். இதில் சிலர், தங்​களுக்கே சீட் கிடைத்​து​விட்​டது போல் கட்​சி​யினர் மத்​தி​யில் உருட்​டிக்​கொண்​டும் இருக்​கி​றார்​கள். இப்​படி சீசனுக்கு வந்து போகிறவர்​களை தேடிப்​பிடித்து அரசு மற்​றும் கட்​சிப் பதவி​களுக்கு சிபாரிசு செய்​வ​தால் வழி​வழி​யாக கட்​சிக்​காக உழைத்​துத் தேய்ந்​தவர்​கள் எல்​லாம் ஒதுங்க ஆரம்பித்​து​விட்​டார்​கள். அவர்​களை எல்​லாம் உற்​சாகப்​படுத்தி உரிய அங்​கீ​காரத்தை அளிக்​காமல் போனால் 2026 தேர்​தலிலும் கோவை​யில் திமுக தலைமை நினைப்​பது சாத்​தி​ய​மா​காமல் போய்​விடும்” என்​றார்​கள்.

திமுக அமைச்​சர​வையை இப்​போது நடத்​திக் கொண்​டிருப்​பதே எங்​கள் மாஜிக்​கள் தான் என்று அதி​முக-​வினரே மார்​தட்​டும் போது, கோவைக்கு மட்டும் ஆத்​திரப்​பட்டு என்ன ஆகப் போகிறது?

Related Post

f

tvk vijay:விழி கவரும் அரசியல் பரபரப்பு! Election day..

Posted by - April 23, 2026 0
நடிகர் மற்றும் Vijay தனது கட்சியை தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட அரசியல் பரபரப்பு, தேர்தல் நாளிலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களில், டிவிகே தலைவர்…
dmk tvk

TVK Vijay: ‘பொது அறிவு இருக்காது’ – தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!

Posted by - May 1, 2026 0
இந்த சட்டமன்ற தேர்தலில் வினோதினி வைத்தியநாதன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அவர் தவெகவுக்கு வாக்களித்த பெண்களை சரமாரியாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம்…
Generated Image November 15 2025 10 41AM

பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

Posted by - November 15, 2025 0
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்…

தமிழக செய்தி சேனல்களை சாடிய தவெக-வினர்..

Posted by - August 21, 2025 0
தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் அதிரடி உரையுடன் மாநாடு முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று முதலே தொண்டர்களின் கட்டுகடங்காத…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *