Generated Image November 06 2025 10 29AM

திமுகவுக்கு ஆதரவு… ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு! ஷாக்காகி பார்த்த விஜய்

169 0

நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று பேசியிருந்தார்.

2021 தேர்தலில் எங்கள் தலைவர் விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவுக்கு ஆதரவு என்று தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் பேசியது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தவெக பொதுக்குழு:

தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து  முடிந்தது. இதில் தவெகவின் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆதவ் ஆர்ஜூனா பேச்சு:

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூருக்கு விஜய் ஏன்  போகவில்லை என்கிற விமர்சனம் உள்ளது. அதற்கு நான் பதில் சொல்கிறேன், கரூர் காவல்துறை வினோதமான காவல்துறை. 8 நாட்களுக்கு முன்பு, அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்தோம். காவல்துறையை நாங்கள் நம்பியது தான் ஒரே தவறு. காவல்துறையை நம்பி தவறு செய்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

டிஎஸ்பியை சாடிய ஆதவ்:

கரூரில் சிறப்பு வாய்ந்த டிஎஸ்பி., செல்வராஜ் உள்ளார். அவர் செந்தில் பாலாஜி தும்பினால், கட்சிப் படித்து செல்வார் அப்படிப்பட்ட ஒருவரை தான் டிஎஸ்பியாக போட்டு வைத்திருக்கிறார்கள். இருக்கட்டும் உங்கள் அப்பன் சி.பி.ஐ., வந்திருக்கிறார். சி.பி.ஐ., இந்த விவாகரத்தில் முதலமைச்சர் உட்பட அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

காவல்துறை பத்திரமாக இந்த தெருவில் வாருங்கள் காவல்துறை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். விஜய் வருவது தொடர்ந்து நேரலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுடைய பாதுகாப்பு குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம். திடீரென திருச்செந்தூர் கோவிலில் இருவது லட்சம் பேர் கூடினால் எப்படி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ. அதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

மக்களின் உயிரை வைத்து விளையாடாதீர்கள்

பத்து அல்லது இருவது சதவீத நிர்வாகிகள் மட்டும்தான் கூட்டத்தில் இருக்கிறார்கள் ‌. உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டும். என்னை கைது செய்யுங்கள், யாரை வேண்டுமென்றாலும் கைது செய்யுங்கள் ஆனால் மக்களின் உயிரை வைத்து விளையாடாதீர்கள். இதுதான் கேவலமான எண்ணம், மக்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதை வைத்து கட்சி இவர்கள் மீது பழி போடலாம் என செய்கிறார்கள்.

திமுகவுக்கு ஆதரவு  :

தொடர்ந்து பேசிய அவர்”உங்களிடம் பாவ மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கு 10 ஆண்டுகள் வேலை பார்த்தற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று பேசியிருந்தார்.தற்போது அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் 2021 தேர்தலின் போது விஜய் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தை ஆதவ் உறுதிப்படுத்தியதாக இணையவாசிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Post

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…
Generated Image November 22 2025 6 17PM
Generated Image November 13 2025 10 14AM

“பவளவிழா பாப்பா… நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா!” – திமுக மீது விஜய் தாக்கு

Posted by - November 13, 2025 0
தவெக-வின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்று அதிகார மயக்க முழக்கம் செய்வதாக திமுக தலைவரும், முதல்வருமான…
tvk

சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?

Posted by - March 17, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. TVK Vijay TN…
Generated Image November 08 2025 10 15AM

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - November 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *