வரும் காலத்தில் தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம்… அமித்ஷா பரபரப்பு பேச்சு..!

313 0

வரும் காலத்தில் தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம்… அமித்ஷா பரபரப்பு பேச்சு..!

வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என அமித்ஷா பேசியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தற்போதே தயாராகி வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு வந்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

முதலாவதாக தென்சென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவிலாம்பாக்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 60 சதவீதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சி இருக்கக்கூடிய 40 சதவீதம் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடியுங்கள். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியை ஜெயிக்க பாடுபடுங்கள். 9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.மேலும், “கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி ஏற்போம்” என்று தெரிவித்தார்.

Related Post

விஜய்யை மிக கடுமையாக விமர்சிப்பது ஏன்? மனம் திறந்த சீமான்

Posted by - September 12, 2025 0
சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யை எதிர்ப்பது ஏன்? என்று சீமான் மனம் திறந்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் சட்டமன்ற…

“என்னை உலக நாயகன் என யாரும் அழைக்கவேண்டாம்” – ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

Posted by - November 11, 2024 0
கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது என கமல்ஹாசன் கருத்து. தன்னை எந்தவிதமான அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம்…

தீபாவளிக்கு மழை உறுதி! 20 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

Posted by - October 18, 2025 0
வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. தீபாவளி திங்களன்று…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - April 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…

போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்

Posted by - June 2, 2025 0
திமுக அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சிக்கு வர முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒரு செண்ட்டிமென்டை வைத்து அவர் இப்படி கூறியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *