விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

241 0

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி திடீரென ஹீரோவாக உருமாறி இன்று கலக்கல் நாயகனாக வலம் வருகிறார் .

இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.

விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் , சரத்குமார் , மேகா ஆகாஷ் ஆகியோருடன் பல இளம் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆச்சு ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளனர் .

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என சிறப்பான போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1339

Related Post

குடும்பத்திற்காக கபடி ஆடும் நாயகன்… பட்டத்து அரசன் பட்டையை கிளப்பினாரா?

Posted by - November 26, 2022 0
பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன்…

பிப்ரவரியில் வெளியாகும் கவினின் ‘டாடா’திரைப்படம்

Posted by - January 25, 2023 0
கவின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில்…

நடிகை மீரா ஜாஸ்மினை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு உள்ள வந்து பாருங்க..?

Posted by - July 3, 2024 0
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல…

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஹிட் ஆக இத்தனை கோடிகள் வசூலிக்க வேண்டுமா- முழு விவரம் இதோ

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. காரணம் ரஜினி, அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ், படத்தின் வியாபாரம் என…

20 நாட்கள்.. ஜெயிலர் 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

Posted by - April 11, 2025 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *