விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – சினிமா வட்டாரங்களில் பரபர தகவல்!

213 0

லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின

பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமான ‘லியோ’வில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கிறார் த்ரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அக்டோபர் மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

விக்ரம் படத்தை தொடர்ந்து லியோ படமும் LCUவில் இணையுமா என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார் லோகேஷ். இந்நிலையில் விக்ரம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த பகத் பாசில் லியோ படத்தில் இணைந்ததாக வெளியான தகவலால் இந்தப் படம் கண்டிப்பாக LCUவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில்  நடைபெறும் என்று கூறப்பட்டது. இதன் பின்னர் சில காட்சிகள் ஹைதராபாதில் எடுக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.

Related Post

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

Posted by - March 26, 2023 0
லியோ விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்…

படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சந்திரமுகி 2’ படக்குழு

Posted by - June 21, 2023 0
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ்…

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Posted by - November 18, 2024 0
கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து…

யாருமே கண்டு கொள்ளாத வெங்கட் பிரபு.. சிதறு தேங்காய் போல் உடைந்த 60028 டீம்

Posted by - January 27, 2025 0
விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கும்போது தினமும் சமூக வலைதளத்தில் இவரை பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதே…
Generated Image January 13 2026 11 18AM

பொங்கல் ரேஸில் இணைந்த ‘வா வாத்தியார்’: கார்த்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

Posted by - January 13, 2026 0
நடிகர் கார்த்தி நடிப்பில், ‘சூது கவ்வும்’ புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் பல தடைகளைத் தாண்டி இறுதியாக பொங்கல் வெளியீடாகத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *