கடவுளே அஜித்தே, ஒருவழியா கிடைத்த தரிசனம்.. ரிலீஸ் தேதியோடு வெளியான விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு.?

193 0

விடாமுயற்சி படம் கடந்த வருடமே தொடங்கப்பட்டாலும் மாத கணக்கில் படப்பிடிப்பு இழுத்தடித்து வந்ததில் ரசிகர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். கடவுளே அஜித்தே உங்க தரிசனம் எப்ப கிடைக்கும் என கேட்டபடி இருந்தனர்.

அதன் பலனாக நேற்று இரவு 11.08 மணிக்கு விடாமுயற்சி டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறிருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் வெளியான அந்த டீசர் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக உள்ளது.

ஏற்கனவே இப்படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தது. தற்போது டீசரை பார்க்கும்போது அது உறுதியாகி இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் காட்சிகள் ஒவ்வொன்றும் அனல் பறக்கிறது.

ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த விடாமுயற்சியின் அஜித்

இதன் ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கார் டிக்கியில் இருந்து ஒரு மனிதனை இழுத்து கீழே போடுகின்றனர். அதை தொடர்ந்து ரெஜினா, அர்ஜுன் இருவரும் ஒரு கேங் ஆக இருப்பதுபோல் காட்டப்படுகிறது.

இதற்கு அடுத்த அஜித் திரிஷாவின் காட்சிகளில் தொடங்கி ஒவ்வொரு சீனும் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. த்ரிஷாவை ஒரு கும்பல் கடத்தி விட மனைவியை அஜித் தேடி கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.

அதற்கு ஏற்ப ஆக்சன் காட்சிகள், பின்னணி இசை அனைத்தும் மிரட்டல் ஆக இருக்கிறது. இப்படியாக ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் அஜித். மேலும் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதிலாக வரும் 2025 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளது பட குழு.

Related Post

நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

Posted by - July 3, 2023 0
மாவீரன் திரைப்படம் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன்…

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்!

Posted by - December 9, 2022 0
இந்த ஆண்டில் youtube-ல் பிரபலமான இந்திய பாடல்களில் விஜய் பட பாடல் இடம்பிடித்துள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தாலும் மக்களிடத்தில்…
Generated Image January 09 2026 10 54AM

போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன் படத்துக்கு யுஏ தணிக்கைச் சான்று வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ’’ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இவ்வாறு ஒரு படத்துக்கு எதிரான…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ

Posted by - June 15, 2024 0
இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *