“ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு” கொதிக்கும் உதயநிதி!

198 0

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிரடியாக பேசிய துணை முதல்வர் உதயநிதி:

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதி கொடுக்க மாட்டோம் என்று மத்திய கல்வி அமைச்சர் மிரட்டுகிறார்.

ஆனால், இவர் மிரட்டினால் பயப்பட நாம் அதிமுக அல்ல. திமுக. இங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்கவில்லை. மு.க. ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி, “தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ்நாட்டிற்குள் இந்தியை அனுமதித்தால் நம்முடைய தாய்மொழியே அழிந்துவிடும். தமிழ்நாட்டில் எப்பொழுதும் இருமொழிக்கொள்கைதான். இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நீங்கள் மிரட்டினால் பயப்பட நாங்கள் அதிமுகவோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது.

“ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு”

மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது. பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்றார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டை தொடர்ந்து, தென் மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் இதுகுறித்து பேசியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த கே.டி. ராமாராவ், “ஸ்டாலினுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். மேலும், இந்த விஷயத்தில் அவரை முற்றிலும் ஆதரிக்கிறேன். தேசத்திற்கு மிகவும் தேவைப்படும்போது, ​​குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாகசெயல்படுத்தியதற்காக தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது.

தென் மாநிலங்களின் முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவது ஜனநாயகம், கூட்டாட்சி இல்லை” என்றார்.

Related Post

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்

Posted by - January 30, 2025 0
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர்…

விசிக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? திமுகவின் மூவ் என்ன?

Posted by - March 2, 2024 0
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல்…

நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?

Posted by - July 11, 2025 0
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் மூன்று முறை எப்போது எனது உயிரை காப்பாற்றினார்? என பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர்…

“நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி…

Posted by - March 12, 2025 0
பாஜக தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கும் சீனியர்களுக்கு, தலைமை ஒரு டாஸ்க் கொடுத்துள்ளதாம். அதற்காக, இபிஎஸ்ஸிடம் சரண்டராகியுள்ளார் பாஜகவின் ஒரு முக்கிய புள்ளி. பாஜக தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *